அண்மைய செய்திகள்

recent
-

யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் வாகரையில் கண்டுபிடிப்பு

 மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர். 


இதன்போது, 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. 

இப்பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், வயலைச் சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது மர்மப் பொருட்கள் தென்படுவதைக் கண்டு வாகரை விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கு வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர். 

பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று, பலத்த மழைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 

திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப்படை உதவி அத்தியட்சகர் ஏ.எம்.ஜி. சுஜீவ அத்தனாயக்க தலைமையில், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார, அம்பந்தனாவெளி கிராம உத்தியோகத்தர் சி. கஜேந்திரன் மற்றும் வாகரை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி அமிலசிந்தக்க பிரேமரத்ன ஆகியோரின் முன்னிலையில் இவ்வெடிபொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. 

குறித்த வெடிபொருட்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்தன. கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்ததாகவும், அவர்களாலேயே இவை புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.




யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் வாகரையில் கண்டுபிடிப்பு Reviewed by Vijithan on January 06, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.