யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானம் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகின்றது.
இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் நேற்று (22) உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதிவரை இந்த உலகக்கிண்ணம் இலங்கையில் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதற்கமையவே யாழ்ப்பாணத்துக்கும் கிண்ணம் எடுத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
Reviewed by Vijithan
on
January 23, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 23, 2026
Rating:


No comments:
Post a Comment