இலங்கைக்கு வந்தார் பிரித்தானிய பிரதி பிரதமர்
பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லாமி (UK Deputy PM David Lammy )இன்று (17) காலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின்போது, பிரதிப் பிரதமர் (UK Deputy PM David Lammy ) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அதோடு, கடந்த ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்திய டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரித்தானியா ஆதரவை வழங்கும் மனிதாபிமான உதவி கூட்டாளர்களுடன் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்தார் பிரித்தானிய பிரதி பிரதமர்
Reviewed by Vijithan
on
February 17, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 17, 2026
Rating:


No comments:
Post a Comment