கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் செல்ல குவியும் பக்தர்கள்
யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் கச்ச தீவு அந்தோனியார் ஆலயம் செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்நிலையில் இன்று பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
February 27, 2026
Rating:


No comments:
Post a Comment