தமிழர் பகுதியில் நபரொருவர் மீது மோதிய இரு வாகனங்கள் ; பரிதாபமாக பறிபோன உயிர்
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியின் உப்போடை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது துவிச்சக்கர வண்டியைத் தள்ளியபடி வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது லொறி ஒன்று மோதியதுடன், பின்னால் வந்த கெப் வாகனமும் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பொலிஸார் விசாரணை
விபத்தில் படுகாயமடைந்த வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், லொறியின் சாரதி விபத்தின் பின் தப்பியோடியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
March 11, 2026
Rating:


No comments:
Post a Comment