அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம்பெற்ற பாரம்பரிய ‘அரிவிவெட்டுச் சிந்து அறுவடை நிகழ்வு’

 கற்சிலைமடு பண்டாரவன்னியன் நாடகக் கலாமன்றம் மிகச் சிறப்பாக ஏற்ப்பாடு செய்த  பாரம்பரிய ‘அரிவிவெட்டுச் சிந்து அறுவடை நிகழ்வு ஒட்டுசுட்டான் புளியங்குளம் குருவிச்சையாறு பாலத்துக்கு அருகில் திரு திருமதி கிருஸ்ணராஜா கவிதாயினி அவர்களின் வயலில் சிறப்பாக இடம்பெற்றது . 


பண்டாரவன்னியன் நாடக கலா மன்றத்தின் போசகர் சி.நாகேந்திரராசா தலைமைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி தி. பிரம்மியா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக தொழிலதிபர்களான இ. கணபதிப்பிள்ளை மற்றும்

இ. சத்தியசீலன் ஆகியோரும்

விவசாய திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். 


ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  இ.நிஷாந்தன் அவர்களின் ஆலோசனையிலும் வழி காட்டலிலும்

கலாபூசணம் சி. வேதவனம் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி புஸ்பராணி மணிசேகரம் ஆகியோரின்  ஒழுங்குபடுத்தலில் பிரதேச அண்ணாவிமார்கள் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் குறித்த நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது 


எமது கிராமிய வாழ்வியலில் எத்தனை சிறப்பும், எவ்வளவு மகிழ்வும், எத்தகைய பேரானந்தமும் உண்டு என்பதை இந்த அரிவிவெட்டு சிந்து அறுவடை நிகழ்வு வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


எத்தனை புதிய வரவுகள் கச்சேரிகளாக, ஆட்டங்களாக, பாட்டங்களாக வரினும் மண்ணின் வாசனை ததும்பும் பாரம்பரிய நிகழ்வுகளில் மனம் நிறைந்த மகிழ்வுடன் மக்கள் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 






















சிறப்பாக இடம்பெற்ற பாரம்பரிய ‘அரிவிவெட்டுச் சிந்து அறுவடை நிகழ்வு’ Reviewed by Vijithan on March 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.