அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற மன் இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தின் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

 மன்னார் மடு கல்வி வலயத்துக்கு  உற்பட்ட மன் இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தில்  2025 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில்   சிறப்பான புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது


 குறித்த நிகழ்வு தொடர்பில் மேலும் தெரிய வருகையில் மன்னார் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக வணிகத் துறையில் இலுப்பைக்கடவை மகா வித்தியாலயத்தின்  மாணவன் டி. டிதுர்சன்  3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  அத்துடன் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவன் த. லினுசன்  கலைப்பிரிவில்  3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 12 நிலையையும் பெற்றிருந்தார் எனவே அவ் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. அந்தோணி வாஸ் ஜூட் தலைமையில் இடம் பெற்றது

 குறித்த விழாவின் பிரதமா விருந்தினர்களாக மடுக்கல்வி வலயத்தின் பணிப்பாளர் Ac.வலரென்  மற்றும் ஸ்தாபனம் மற்றும் முகாமைத்துவத்தின்  வலய பிரதிநிதி - ஜூட் இந்திரகுமார் அவர்களும், தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் எஸ் ஜெகன் அவர்களும், வலயக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி. ஸ்டான்லின் அவர்களும்   அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் குறித்த நிகழ்வில் மாணவர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் என பலரும் கலந்து நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது







சிறப்பாக இடம் பெற்ற மன் இலுப்பக்கடவை மகா வித்தியாலயத்தின் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு Reviewed by Vijithan on April 10, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.