புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டமானது, பொதுமக்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இதன் முதற்கட்டத்தின் கீழ், பேருந்து நிலையக் கட்டடங்களைப் புனரமைத்தல், புதிய தகவல் மையமொன்றை நிறுவுதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுப்புறங்களை அழகுபடுத்துதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை விமானப்படை தனது சிரமதானப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகளும் நாளை (09) ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக 2.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 15 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
April 08, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment