இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து
வெல்லவாய -மொனராகலை பிரதான வீதியின் வருணகம பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்தில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.
மீன் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மற்றுமொரு லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மீன் ஏற்றிச் சென்ற லொறியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த விதம் அருகில் இருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.]
இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து
Reviewed by Vijithan
on
April 08, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 08, 2026
Rating:


No comments:
Post a Comment