அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையை பிறப்பிடமாக கொண்ட யாழ் அமல மரி தியாகிகளின் சபையில் பிரபலயமான சிறந்த பிரசங்கி காலமானார்.

யாழ் அமல மரி தியாகிகளின் சபையில்  பிரபலயமான சிறந்த பிரசங்கி காலமானார்.




அமல மரி தியாகி சபையைச் சேர்ந்த அருட்பணியாளரும் மறை போதகருமான அருட்பணி பத்திநாதன் ஜெறோம் லெம்பேட் அடிகளார் தனது 76ஆவது வயதில் இறைபதம் அடைந்துள்ளார்.


மன்னார் பேசாலையை பிறப்பிடமாகவும் யாழ் பிராந்திய அமல மரி தியாகிகளின் சபையில் ஒரு பிரபலயமான சிறந்த பிரசங்கியாகவும் திகழ்ந்த அருட்பணி பத்திநாதன் ஜெறோம் லெம்பேட் அடிகளார் புதன்கிழமை (20.05.2026) இறைபதம் அடைந்துள்ளார்.


கடந்த மூன்று மாதங்களாக சுகயீனமுற்ற நிலையில் இருந்த பொழுதே அவர் மரணத்தை தழுவிக் கொண்டார். இவரின் உடல் யாழ் கொழும்புத்துறை அமல மரி தியாகிகளின் சிறிய குருமட சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு பின் வெள்ளிக் கிழமை (22.05) காலை மக்கள் அஞ்சலிக்காக யாழ் சென் மேரீஸ் பேராலயத்தில் வைக்கப்பட்டு பிற்பகல் மூன்று மணிக்கு திருப்பலியைத் தொடர்ந்து சென். மேரீஸ் சேமக்காலையில் நல்லடக்கம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






இவர் இலங்கை பூராகவும் தமிழ் பிரதேசங்களில் ஆலய நவநாட்களில் ஒரு சிறந்த பிரசங்கியாக திகழ்ந்ததுடன் இவர் கல்வி கற்றக் காலத்திலும் கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் தனது குருத்துவ பயிற்சியில் ஈடுபட்டக் காலத்தில் இலக்கிய கதை பாத்திரங்களில் ஒரு சிறந்த நடிகராகவும் புகழ் பெற்றுக் காணப்பட்டார்.


பேசாலை மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலய பங்கில் இவர் இரண்டாவது அருட்டிணியாளருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





மன்னார் பேசாலையை பிறப்பிடமாக கொண்ட யாழ் அமல மரி தியாகிகளின் சபையில் பிரபலயமான சிறந்த பிரசங்கி காலமானார். Reviewed by Vijithan on May 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.