அண்மைய செய்திகள்

recent
-

36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்

 36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் பங்களாதேஷின் கொக்ஸ் பாஸார் (Cox's Bazar), மஹேஷ்காலிப் பகுதியில் உள்ள மீனவர் குழுவொன்றினால் மீட்கப்பட்டுள்ளனர்.


 


கடந்த 23 ஆம் திகதி இரவு 10:00 மணியளவில் வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதிக்கு அருகில் மிதந்து கொண்டிருந்த போதே பங்களாதேஷ் மீனவர்களால் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


 


பின்னர் அவர்கள் பங்களாதேஷ் மீனவர்களின் படகில் ஏற்றப்பட்டு மஹேஷ்காலி கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


 


மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் எனத் தெரியவந்துள்ளது.


 


உணவு மற்றும் குடிநீர் இல்லாத நிலையில், கடலில் கழித்த 36 நாட்களும் மீன்களை உண்டு இவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.


 


இவர்கள் இலங்கையின் தெவிநுவரைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதான எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது 30 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


 


குறித்த மீனவர்கள் கடலில் எவ்வாறு தத்தளித்தார்கள் என்பது குறித்தும், அவர்கள் உண்மையில் 36 நாட்கள் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கழித்தார்களா என்பது குறித்தும் பங்களாதேஷ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இச்சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்கும் அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாக பங்களாதேஷ் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.






36 நாட்கள் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன் Reviewed by Vijithan on July 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.