அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு காய்ச்சல் - பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.


 


குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் அழுத்த வேண்டாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


 


லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் உள்ளதாகவும், இந்நிலைமை மேலும் அதிகரித்தால் வைத்தியசாலையின் கொள்ளளவை விட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


 


எனவே, தமது குழந்தைகளுக்குக் காய்ச்சல் காணப்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு விசேட வைத்தி நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.


 


மேலும், வீடுகளிலிருந்து கை வைத்தியம் செய்வதன் மூலம் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதற்கான பொன்னான நேரம் வீணாகிறது என்றும், சுய சிகிச்சைகளைத் தவிர்த்து உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.







 


 


டெங்கு காய்ச்சல் - பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! Reviewed by Vijithan on July 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.