அண்மைய செய்திகள்

recent
-

கடல் பிராந்தியங்களுக்கான ஆபத்து நீங்கியது!

 நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பிராந்தியங்களிலும் பயணிக்கும் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்காக, இன்று (17) விசேட பச்சை நிற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களம் பிற்பகல் 3.00 மணிக்கு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. 

அதற்கமைய, இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது வலுவிழந்துள்ளது. 

இதன் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடல் பரப்பிலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பிராந்தியங்களிலும் அதன் தாக்கம் படிப்படியாகக் குறையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







கடல் பிராந்தியங்களுக்கான ஆபத்து நீங்கியது! Reviewed by Vijithan on May 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.