மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் எடுத்து வரப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு குடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை (20)மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளைய தினம் வியாழக்கிழமை (21) இடம்பெற உள்ள நிலையில் கொடிச்சீலை இன்றைய தினம் புதன்கிழமை (20) சம்பிரதாய பூர்வமாக எடுத்து வரப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக கொடிச் சீலை வழங்குகின்றவர்களினால் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாகத்தினரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.
Reviewed by Vijithan
on
May 20, 2026
Rating:



.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment