மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற அழகுக் கலை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!
மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்று (20) காலை 9.30 மணியளவில் அழகுக் கலை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
ரூபி அழகுக் கலை அகாடமியின் ஏற்பாட்டில் அதன் நிறுவனர் ரூபி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ரூபி அழகுக்கலை நிலையத்தில் ஓராண்டு கால அழகுக் கலைப் பயிற்சி யை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் முகமாகவும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான மணமகள் அலங்கார கண் காட்சியாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஸ்டான்லி டி மெல் உட்படப் பல முக்கிய பிரமுகர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மணமகள் அலங்கார போட்டிகளில் பங்குபற்றி மிகச் சிறப்பான முறையில் அழகுக் கலை ஒப்பனைகளை மேற்கொண்ட வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Reviewed by Vijithan
on
May 20, 2026
Rating:

%20(2).jpeg)

No comments:
Post a Comment