அண்மைய செய்திகள்

recent
-

நாடு முழுவதும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி“ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” ஆரம்பம்.

 தேசிய வறுமை ஒழிப்பு வேலைத் திட்டமான “பிரஜா சக்தி” திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் “ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டன.


அதன் ஒரு பகுதியாக ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்" நிகழ்ச்சித்திட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாளைக்குளி கிராமத்தில் பால் சேகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இன்று  மாலை இடம்பெற்றது.


 அதற்காக 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக   பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்  கலந்து கொண்டார். 


மேலும் குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர், மாவட்டச் செயலக ,பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்   திணைக்களங்களின் தலைவர்கள்,கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இவ்வேலை திட்டங்களின்  ஊடாக கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல், நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சமூக வலுவூட்டலை உறுதிப்படுத்துதல் என்பன பிரதான நோக்கங் களாகக் கொண்டுள்ளன.





நாடு முழுவதும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி“ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” ஆரம்பம். Reviewed by Vijithan on June 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.