பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்.
பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை முதல் மாலை வரை இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.
மனோன் மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் மன்னார் மாவட்ட மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றலுடன் குறித்த இலவச மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.
மனோன்மணி அறக்கட்டளையின் ஸ்தாபகர் அகஸ்டின் அவர்களின் ஒருங்கினைப்பில் இடம்பெற்ற குறித்த மருத்துவ முகாமில் தொற்றா நோய்களுக்குரிய குருதி பரிசோதனைகள். (நீரிழிவு ,Lipid profile) பற் சுகாதாரம் மற்றும் பல் சீரமைப்பு பற்றிய ஆலோசனைகள்,புற்றுநோய் சம்பந்தமான ஆலோசனைகள்,கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள், பொது மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள், சத்திரசிகிச்சை தொடர்பான ஆலோசனைகள், பெண் நோயியல் மற்றும் கர்ப்பவதிகளுக்கான ஆலோசனைகள், குழந்தை மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்ட தோடு,பரிசோதனைகளின் பின்னர் உரிய மருந்துகள் வழங்கப்பட்டது.
குறித்த மருத்துவ முகாமில் வைத்தியர்கள்,மன்னார் மாவட்ட மருத்துவ பீட மாணவர்கள் மனோன்மணி அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து கொண்டு மருத்துவ உதவிகள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
June 28, 2026
Rating:


No comments:
Post a Comment