இலங்கையில் 60 அடி உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம்!
இலங்கையிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (30) வியாழக்கிழமை ஆசீர்வதிக்கப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு சீதுவை 'சுபுவன் அரண' வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான சொரூபம், பொதுமக்களின் வழிபாட்டிற்காகவும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டது. 60 அடி உயரமுடைய இயேசு கிறிஸ்துவின் , வெண் இரும்பினால் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
சுபுவன் அரணவின் நிர்வாகியான அருட்தந்தை டாரெலின் கலைக் கோட்பாட்டிற்கு அமைவாக இச்சொரூபம் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
நிகழ்வில் கத்தோலிக்கக் குருக்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் ஏராளமான கத்தோலிக்க பக்தர்கள் மட்டுமன்றி, பௌத்த மதகுருமார்களும் கலந்துகொண்டு மத நல்லிணக்கத்தைச் சிறப்பித்தனர்.
Reviewed by Vijithan
on
July 31, 2026
Rating:


No comments:
Post a Comment