யாழில் இருந்து யாசகர்கள் வௌியேற்றம்!
யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாகம் இருந்த 30க்கும் அதிகமான யாசகர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிசாரின் பங்களிப்புடன் அவர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்
தூய்மையான சுற்றுச் சூழலை ஏற்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ் கோட்டை சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
வௌிமாவட்டங்களில் இருந்து சென்று யாழில் யாசகத்தில் ஈடுபட்டோரை அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியோருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
யாழில் இருந்து யாசகர்கள் வௌியேற்றம்!
Reviewed by Vijithan
on
July 10, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 10, 2026
Rating:


No comments:
Post a Comment