அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் பிரபல தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது.

 




மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபருமான முஹமட் பாஹீம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த தாக்குதல் சம்பவம் இன்று வியாழக்கிழமை (2)  மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.


  குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளரின் சகோதரனும் மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் பழக்கடை  நடத்தி வருகின்ற நபரை  மன்னார் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த நபருடன் இணைந்து மேலும் இருவர் குறித்த தொழிலதிபரை தாக்கும் சி.சி.ரிவி வீடியோ (CCTV) காட்சி வெளியாகியுள்ளன.


தாக்குதலுக்கு உள்ளான தொழிலதிபர் முஹமட் பாஹிம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த இருவருக்கும் இடையில் பழ விற்பனையில் ஏற்பட்ட நீண்ட கால தர்க்கம் காரணமாகவே குறித்த தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் பிரபல தொழிலதிபர் முஹமட் பாஹிம் மீது தாக்குதல்-பழக்கடை உரிமையாளர் கைது. Reviewed by Vijithan on July 02, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.