அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு நோய் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரிசோதனை திட்டங்களின் மூலம் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

 

நேற்று (14) முதல் ஒரு வார காலத்திற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இருப்பினும், கடந்த காலத்தில் ஏற்பட்ட டெங்கு அதி-அபாயகரமான சூழ்நிலையில் ஓரளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சுகாதாரத் துறையினர் மற்றும் மக்களின் அர்ப்பணிப்பாலேயே இதனை சாதிக்க முடிந்தது என்றும் கூறினார்.

 

எனினும், ஒரு வார கால டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குக் காரணம், வரவிருக்கும் மழைக்கால சூழ்நிலையால் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதே என அவர் சுட்டிக்காட்டினார்.

 

அதற்கமைய, நோய் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதற்காகவே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

 

இத்திட்டம் 6 மாகாணங்கள் மற்றும் 15 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, அதற்கு இணையாக கொழும்பு மாநகர எல்லைக்குள்ளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

அதன்படி, இத்திட்டத்திற்காக ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவிற்கும் தலா 10 குழுக்கள் வீதம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தக் குழுக்களில் சுகாதார ஊழியர் ஒருவர், இராணுவ அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் தன்னார்வலர்கள் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.




டெங்கு நோய் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு Reviewed by Vijithan on September 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.