அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம்! இளைஞர்குழு அட்டகாசம்

 வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (15.09) மதியம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இரு மாணவர்களும் பாடசாலை முடிவடைந்து வீடு செல்ல முற்பட்ட போது பாடசாலைக்கு வெளியே நின்ற 10ற்கும் மேற்ப்பட்டவர்களை கொண்ட இளைஞர் குழு அவர்கள்மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதில் உயர்தரத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியா நகரை அண்மித்த பாடசாலைகளில் பாடசாலை முடிவடைகின்ற நேரங்களில் அதற்கு தொடர்பில்லாத இளைஞர்கள் குழுவாக வந்து நிற்கும் நிலமை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது. அவர்களால் அந்தப் பகுதிகளில் குழு மோதல் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

எனவே இந்த விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகமும்,பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம்! இளைஞர்குழு அட்டகாசம் Reviewed by Vijithan on September 16, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.