மன்னார் வைத்தியசாலையில் ரூ.600 மில்லியன் இந்திய நிதியுதவியில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
மன்னார் வைத்தியசாலையில் ரூ.600 மில்லியன் இந்திய நிதியுதவியில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
இந்திய அரசாங்கத்தின் ரூ.600 மில்லியன் மானிய நிதியுதவியின் கீழ், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நவீன விபத்து மற்றும் அவசர சிகிச்சை வளாகம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் அவசர சிகிச்சை, விபத்து மற்றும் தீவிர சிகிச்சைக்கான வசதிகள் உள்ளடக்கப்படவுள்ளன.
இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்கான வசதிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், விபத்து மற்றும் அவசர நிலைகளில் நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை வழங்குவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் மானிய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், மன்னார் மக்களின் சுகாதார சேவையில் முக்கியமான அபிவிருத்தியாக அமையவுள்ளது.
Reviewed by Vijithan
on
September 16, 2026
Rating:


No comments:
Post a Comment