அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பஜார் பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் கைவரிசையை காட்டிய திருடர்கள்.

 மன்னார் பஜார் பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் இன்று(1)  வியாழக்கிழமை அதிகாலை திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.


இரண்டு நகைக்கடை மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களில்  கைவரிசையை காட்டியுள்ளனர்.


குறித்த வர்த்தக நிலையங்களுக்கு மேல் பகுதியால் குறையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற  திருடர்கள் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இன்று (1) வியாழக்கிழமை காலை வர்த்தக நிலையங்களை திறந்து பார்த்த நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு தமது வர்த்தக நிலையங்களுக்கு உள்ளே திருடர்கள் நுழைந்தமை தெரிய வந்துள்ளது.


குறித்த  நகைக்கடைகள் மற்றும் ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்கள் இன்று கால மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















மன்னார் பஜார் பகுதியில் உள்ள 4 வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் கைவரிசையை காட்டிய திருடர்கள். Reviewed by Vijithan on October 01, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.