அண்மைய செய்திகள்

recent
-

நாட்டின் பல பகுதிகளில் நாளை கடும் வெப்பநிலை

 வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் நாளை (14) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


இன்று (13) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பின்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்தப்பட வேண்டிய'மட்டத்தில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த அதிக வெப்பமான வானிலை நிலவுவதால் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.











நாட்டின் பல பகுதிகளில் நாளை கடும் வெப்பநிலை Reviewed by Vijithan on September 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.