அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, உட்பட பல மாவட்டங்க்களுக்கு வெப்ப காலநிலை எச்சரிக்கை

  வெப்பமான காலநிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


இதன்படி, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று (29) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை மாலை 4:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பகல் வேளையில், மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு (heat index) எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலையை எட்டக்கூடும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.





யாழ்ப்பாணம், கிளிநொச்சி, உட்பட பல மாவட்டங்க்களுக்கு வெப்ப காலநிலை எச்சரிக்கை Reviewed by Vijithan on September 29, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.