சிறை வாகனத்தில் ஷிரந்தி ராஜபக்ச; ஒப்பாரி வைத்த பெண்கள்!
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை,சிறை வாகனத்தில் ஏறியபோது அங்க்கு இருந்த சில பெண்கள் ஒப்பாரி வைத்து அழுத புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
'சிறிலியா சவிய' நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச, அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று (7) உத்தரவிட்டது.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பெண் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் திருமதி ஷிரந்தியை வேனில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, அவருக்கு ஆதரவான சுமார் 10 முதல் 20 வரையிலான பெண்கள் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி கூடி, அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
பொலிஸார் அவரை அந்தப் பெண்களிடமிருந்து மீட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் முடிவில், திருமதி ஷிரந்தி 6 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அப்போது நேரம் மிகவும் தாமதமாகியிருந்த போதிலும், அவருக்கு ஆதரவான அந்தப் பெண்கள் குழு நீதிமன்ற வாயிலுக்கு அருகிலேயே தொடர்ந்து நின்றது. திருமதி ஷிரந்தி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் ஏற்றப்படுவதைப் பார்ப்பதற்காகவே அவர்கள் அங்கு கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் பேருந்தில் ஏற்றப்பட்டபோது, அவர்கள் 'ஜயவேவா' (வெற்றி உண்டாகட்டும்!) என்றும், 'எங்கள் தாய்நாட்டின் தாய்க்கு வெற்றி என்றும் முழக்கமிட்டனர்; அத்துடன் 'மேடம், நாங்கள் இங்கே இருக்கிறோம்' என்று அவர்கள் கூறுவது அவருக்குக் கேட்கும் வகையிலும் நடந்துகொண்டனர்.
ஷிரந்தி பேருந்திற்கு அழைத்து வரப்பட்ட பிறகு, அவர் சிறைக்குச் செல்லும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதேசம்யம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபசவுக்கு, மனைவி கைது செய்யப்பட்டமை பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
October 08, 2026
Rating:


No comments:
Post a Comment