அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் ஈழப்போர் வரலாற்றில் முதல் பெண் போராளி மாலதியின் 39வது நினைவு நாள் மன்னாரில் அனுஸ்ரிப்பு.

 ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது பெண் போராளியும், இந்திய இராணுவத்திற்கு (IPKF) எதிரான மோதலில் கோப்பாயில் வீரமரணமடைந்த இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் (சகாயசீலி பேதுருப்பிள்ளை) 39 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, அவரது சொந்த மண்ணான மன்னார் ஆட்காட்டிவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10)மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


1967 ஆம் ஆண்டு மன்னாரில் பிறந்த மாலதி வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை இராணுவத்தாலும் இந்திய இராணுவத்தாலும் தமிழ் பெண்கள் படும் அவலத்தையும் அவர்கள் எதிர்கொண்ட துயரத்தையும் எண்ணி ஆயுதம் ஏந்தினார்.


 தனது 20 வது வயதில்  1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற சண்டையில் நேருக்கு நேர் மோதி வீரச்சாவடைந்தார்.


.தமிழ் ஈழப்போர் வரலாற்றில் வீரசாவடைந்த முதல் பெண்ணாக மாலதி நினைவு கூறப்படுகிறார்.


 அவரின் உயிர் தியாகத்தையும்  துணிச்சலையும் கௌரவப் படுத்தும் முகமாக  அவளின் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் மதிப்பளித்து மாலதியின் பெயரில் படையணிகளும் உருவாக்கப்பட்டது.


பெண்களாலும் ஈழ விடியலுக்காக போராட முடியும் என்பதை நிரூபித்து உயிர் திறந்த மாலதியின் நினைவு பலராலும் மறுக்கப்பட்டாலும் வருடா வருடம் ஆட்காட்டிவெளி பகுதியில் அவளின் நினைவாகஅவரின் குடும்பத்தினரால் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபட்டு இடம்பெற்று வருகின்றது.


குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வில்பொது சுடர்ஏற்றலுடன்  மாலதியின் பெற்றோர், உறவினர்கள் இணைந்து மாலதியின்திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது














தமிழ் ஈழப்போர் வரலாற்றில் முதல் பெண் போராளி மாலதியின் 39வது நினைவு நாள் மன்னாரில் அனுஸ்ரிப்பு. Reviewed by Vijithan on October 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.