நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மாகாணங்களுக்கும் அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (11) முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பானது நாளை பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Reviewed by Vijithan
on
October 11, 2026
Rating:


No comments:
Post a Comment