அண்மைய செய்திகள்

recent
-

சாவகச்சேரியில் கோர விபத்து: தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு!

 யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் - பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


நேற்று (13) இரவு கனகம்புள்ளியடி சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக பயணித்த வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியந்துள்ளது.


விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும், அதில் பயணித்த சிறுவனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தையும், 9 வயதுடைய அவரது மகனுமே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.


விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




சாவகச்சேரியில் கோர விபத்து: தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு! Reviewed by Vijithan on November 14, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.