அண்மைய செய்திகள்

recent
-

நுவரெலியா விடுதியில் பெண் கொலை: காதலன் 48 மணிநேரத் தடுப்புக்காவலில்!

 நுவரெலியா - மாகஸ்தோட்ட பகுதியிலுள்ள கபானா சுற்றுலா விடுதியொன்றில்  27 வயதுடைய பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைவிலங்குடன் தப்பிச் சென்று மீண்டும் கைதான சந்தேகநபரை 48 மணி நேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.



கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பெண்ணின் காதலனான 27 வயதுடைய சந்தேகநபர், தெரிபஹா பகுதியைச் சேர்ந்தவராவார்.



சம்பவத்தின் பின்னர் தெரிபஹா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்திருந்த அவர், பொலிஸ் காவலிலிருந்த போது கைவிலங்குடன் தப்பிச் சென்றிருந்தார்.



இந்நிலையில், பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், கடந்த 12ஆம் திகதி இரவு 11.30 அளவில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்துக்கு அருகில் கைவிலங்குடன் மதுபோதையில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.



இதன்போது அவர் மறைத்து வைத்திருந்த நஞ்சுப் போத்தல் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.



ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று (13) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலதிக விசாரணைகளுக்காக அவரை 48 மணி நேரம் தடுப்புக்காவலில் வைக்க பொலிஸார் அனுமதி கோரினர்.



இதனையடுத்து சந்தேகநபரை 48 மணி நேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், எதிர்வரும் 15ஆம் திகதி அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.








நுவரெலியா விடுதியில் பெண் கொலை: காதலன் 48 மணிநேரத் தடுப்புக்காவலில்! Reviewed by Vijithan on November 14, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.