ஹீனைஸ் நகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஹீனைஸ் நகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா (27) இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
சட்ட முதுமாணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹுனைஸ் பாரூக், அஷ்ஷைய்க் M.J.M. றிஸ்வான் (மதனி), ஹுனைஸ் நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் குதுபு சமான், ஹுனைஸ் நகர் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் A.J.M. முஸம்மில், லெப்ட்டினன் கயான் நுகேவல, அருட்தந்தை லுமன் லோகு ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கிராம மக்களும் இணைந்து குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
இதன் போது குத்பா பிரசங்கத்தை அஷ்ஷைய்க் M.J.M. றிஸ்வான் (மதனி) நிகழ்த்தினார் ,
அதன் பின்னர் சட்ட முதுமாணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹுனைஸ் பாரூக் அவர்களின் விஷேட உரை ஆற்றப்பட்டது.
Reviewed by Vijithan
on
November 27, 2026
Rating:






No comments:
Post a Comment