அண்மைய செய்திகள்

recent
-

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - சிவப்பு எச்சரிக்கை

 பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் இயங்கும் பல நாள் மீன்பிடி படகுகளுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடக்கே சாய்வாக வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்றைய (15) தினத்திற்குள்  தாழமுக்கமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இந்த வளிமண்டலத் தொகுதியானது நாளைய (16) தினத்திற்குள் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் புயலாக  வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இதன் காரணமாக வடக்கு அகலாங்கு  5 இற்கும் 15 இற்கும் இடையில் மற்றும் கிழக்கு நெட்டாங்கு  80 இற்கும் 90 இற்கும் இடையில் உள்ள கடல் பிராந்தியங்களிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களிலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், ஏற்கனவே குறித்த கடல் பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.





மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் - சிவப்பு எச்சரிக்கை Reviewed by Vijithan on November 15, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.