தேசிய விளையாட்டு விழாவில் சாதனை படைத்த மன்னார் வீராங்கனைக்கு மாவட்டச் செயலகத்தில் கௌரவிப்பு!
இலங்கையின் 50 வது தேசிய விளையாட்டு விழா – 2026 இன் ஒரு அங்கமாக நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை L.N.D. திருக்ஷி மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து இன்றைய தினம் திங்கட்கிழமை (16) கௌரவிக்கப்பட்டார்.
குறித்த குத்துச்சண்டைப் போட்டியில் 70–75 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், தனது திறமையை வெளிப்படுத்தி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், அவரது விளையாட்டுச் சாதனையை பாராட்டி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் குறித்த வீராங்கனையை கெளரவித்து பாராட்டு தெரிவித்தார்.
இதன்போது வீராங்கனைக்கு நினைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அவரது வெற்றி பாராட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Vijithan
on
November 16, 2026
Rating:


No comments:
Post a Comment