அண்மைய செய்திகள்

recent
-

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்

 தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, அந்த கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன் கடல் அலைகள் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் அபாயம் நிலவுகிறது.



வானிலை முன்னறிவிப்பு


இதன் காரணமாக, ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் கடல்சார் பயணங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




மேலும், கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, அதற்கேற்ப எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் Reviewed by Vijithan on November 08, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.