அண்மைய செய்திகள்

recent
-

வனப்பகுதியில் காட்டு யானையை துன்புறுத்திய 7 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

 யஹன்கல வனப்பகுதியில் நடமாடும் காட்டு யானைக்கு மாணவர் ஒருவரினால் கல்வீச்சு மேற்கொள்ளும் விதத்திலான காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.


அந்தக் காணொளி மற்றும் சம்பவம் தொடர்பில், 119 காவல்துறை அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்ட உடுதும்பர பொலிஸார், யஹன்கல வனக்காப்பகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை மற்றும் விலங்குகளுக்கு துன்புறுத்தல் இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 7 சிறுவர்களை கடந்த 06 ஆம் திகதி மாலை கைது செய்தனர்.








கைது செய்யப்பட்டவர்கள் 15, 16 மற்றும் 17 வயதுடைய, அந்தப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, சந்தேகநபர்களான மாணவர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த உடுதும்பர காவல்துறையினர், இடம்பெற்ற தவறு குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தி, மாணவர்களுக்கு கடுமையான அறிவுரைகளை வழங்கிய பின்னர் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

வனப்பகுதியில் காட்டு யானையை துன்புறுத்திய 7 மாணவர்களுக்கு நேர்ந்த கதி Reviewed by Vijithan on November 08, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.