மன்னார் நகர சபை பிரிவிலுள்ள முன்பள்ளிகளில் கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநரிடம் அவசர கோரிக்கை-நிர்க்கதியில் உள்ள 60 ஆசிரியர்கள்.
மன்னார் நகர சபை பிரிவிலுள்ள முன்பள்ளிகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நகர சபையினால் ஒரு வருடத்திற்கு என மாதாந்த கொடுப்பனவாக ஒதுக்கியுள்ள நிதியை விடுவிக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் நகர சபை பிரிவிலுள்ள 23 முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள் சுமார் 60 பேர் வரை இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மன்னாரில் விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் நகர சபையினால் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட அந்த நிதி உதவியானது ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மன்னார் எல்லைக்குள் உட்பட்டு இயங்கு கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு காலத்திற்கான கொடுப்பனவை மன்னார் நகர சபை வழங்க தீர்மானித்திருக்கிறது.
இந்த தீர்மானம் தொடர்பாக எங்களுக்கு கடந்த மாசி மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எங்களுடைய வடமாகாண ஆளுநர் அவர்களால் தீர்மானம் புறக்கணிக்கப்பட்டு, தற்பொழுது இரண்டாவது பாதீட்டில் எங்களுக்காக கதைக்கப்பட்டு, தற்பொழுது எங்களது ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க வேண்டும் என பாதீட்டில் ஒதுக்கி இந்த நிதியானது தவிசாளர் அவர்களினால் மிக முக்கியமாக இந்த முக்கிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கிடைக்கப் பெற வேண்டிய நிதி உதவியானது எங்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் .
இந்தக் காலத்தில் இந்த நிதி உதவி எங்களுக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை. ஆகவே இந்த நிதி உதவியானது எமது ஆளுநர் அவர்களின் ஒப்புதலின் கீழ் வர வேண்டி இருக்கின்ற காரணத்தினால், இந்த நிதி உதவியை எங்களது ஆளுநர் எங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தான் நாங்கள் இந்த முன்பள்ளி ஆசிரியர் சமூகம் சார்பாக
கேட்டுக் கொள்கிறோம்.
நாங்கள் கடந்த 25, 30 ஆண்டுகளையும் கடந்த ஆசிரியர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
மாகாண திணைக்களத்தினூடாக பெறுகின்ற ரூபாய் 6 ஆயிரம் மட்டும் அதுவும் பதிவில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெறுகிறது. ஏனையவர்களுக்கு நாங்கள் பெற்றோரிடம் வாங்குகின்ற ஒரு சிறியதொகையே கிடைக்கின்றது. வேறு எந்த கொடுப்பனவுகளும் எமக்கு கிடைக்கவில்லை.
ஆகவே எங்களுக்கு இந்த மன்னார் நகர சபையினால் ஒதுக்கப்பட்ட இந்த தலா 10 ஆயிரம் ரூபாய் ஒரு வருடத்திற்கான நிதியினை ஆளுநர் எங்களுக்கு விடுவித்து தந்து, எங்களது ஆசிரியர்களது காலம் பொற்காலமாக சிறப்பிக்கிறதுக்கு ஆளுநர் எங்களுக்கு இந்த நிதியை விடுவித்து, நாங்கள் எதிர்வரும் காலங்களில் முன்பள்ளி சமூகத்தை நல்லதொரு சமூகமாக கட்டியெழுப்பக்கூடிய ஒரு ஆசிரியராக திகழ வேண்டும் .
எங்களுடைய பொருளாதாரமும் எங்களை மேம்படுத்த வேண்டும். இந்த பொருளாதாரத்தால் நாங்க வீழ்ச்சி அடைந்து கொண்டு போகின்ற பொழுது தான் இன்னும் எங்களுக்கு நிறைய மன சேர்வுகள் ஏற்படுகிறது. ஆகவே இந்த மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டை ஆளுநர் அங்கீகரித்து எங்களுக்கு மிக விரைவாக பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
November 27, 2026
Rating:


No comments:
Post a Comment