மன்னார் மாவட்ட மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி- சமாச தலைவர் என்.எம்.ஆலம்.-Photo
மன்னார் மாவட்ட மீனவர்கள் தமது வருவாயை பெற்றுக்கொள்ளுவதில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,.
மன்னார் மாவட்ட மீனவர்கள் தமது நாளந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிறமங்களுக்கு முகம் கொடுத்து வருவதை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது.
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை சட்டவிரேதாமாக பயண்படுத்துவதன் காரணத்தினாலேயே மீனவர்கள் அதிகலவில் பாதீக்கப்படுகின்றனர்.
குறிப்பாக இந்திய மீனவர்களின் இழவைப்படகு முறைமையிலான தொழில் முறைகள்,நாட்டுப்படகுகளின் தொழில் நடவடிக்கைகள் காரணமாக மாவட்ட மீனவர்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.
நாட்டுப்படகுகளில் வருகை தரும் இந்திய மீனவர்கள் கடலில் நீண்ட நாட்கள் தங்கி நின்று மீன் பிடித்துச் செல்லுகின்றனர்.இதனால் நாளாந்தம் தொழிலுக்குச் செல்லும் எமது மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மேற்குறித்த தொழில் முறைகள் இலங்கை அரசாங்கத்தினால் எமது மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட தொழில் முறைகளாக காணப்படுகின்றது.
ஆனால் தடை செய்யப்பட்ட குறித்த மீன் பிடி நடவடிக்கைகளை இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பினுள் மேற்கொள்ளுகின்றனர்.
இழுவை மடித்தொழில் பாரிய கடல் வளத்தை அழிக்கக்கூடியது என்பதினால் இலங்கையில் குறித்த இழுவை மடித்தொழிலுக்கு அரசாங்கம் தடை விதித்தது.
அது மட்டுமின்றி தங்கூசி வலைகளை பயன்படுத்தி இந்திய மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் தொழில் நடவடிக்கைகளும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இலங்கையின் வட பகுதியில் அதிலும் மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான தொழில் நடவடிக்கைகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துமீறி தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டால் குறித்த வலைத்தொகுதிகள் பறிமுதல் செய்யப்படுவதோடு குறித்த மீனவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இவ்வாறு பாதிக்கப்படும் மீனவர்களை இலங்கை அரசும் சரி வடமாகாண சபையும் சரி கண்டு கொள்ளுவதாக இல்லை.
பல வருடங்களாக இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
குறிப்பாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களினால் தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகின்றனர். தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலத்திற்கு மன்னார் வந்து குடும்பத்துடன் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் மன்னார் மாவட்ட மீனவர்களின் நிலை கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
இது மட்டுமின்றி மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியம் தற்போது நிறுத்தப்பட்டு இரண்டு வருடங்களைக் கடக்கின்றது.
தற்போது எரிபொருள் மானியத்திற்கு பதிலாக வலைகளும் ஏனைய உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்ற போதும் அவை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தில் தற்போது 9 ஆயிரத்து 500 மீனவ குடும்பங்கள் உள்ளது.
இதில் ஆண்களை தலைமைத்துவமாக கொண்ட 7000 மீனவ குடும்பங்களும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 2500 மீனவ குடும்பங்களும் அடங்குகின்றனர்.
இவர்களை நம்பி மன்னார் மாவட்டத்தில் 38 ஆயிரம் மீனவ குடும்ப உறவுகள் மீன் பிடி வருவாயை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மீன்பிடி மூலம் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து உணவு,கல்வி,மருத்துவம் உற்பட சகல தேவைகளையும் நிறை வேற்றுகின்றனர்.
இந்த வருவாய் இழக்கப்படுகின்ற போது குறித்த மீனவ குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வரும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வடமாகாண அரசும்,மத்திய அரசும் உரிய தீர்வைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி- சமாச தலைவர் என்.எம்.ஆலம்.-Photo
Reviewed by NEWMANNAR
on
September 08, 2014
Rating:

No comments:
Post a Comment