அண்மைய செய்திகள்

recent
-

மறைந்தும் மறையாத மாணிக்கம் மன்னார் மண்ணின் மூத்த ஊடகவியலாளர் "எழுத்தியல் நாயகன்" மக்கள் காதர்-1ம் ஆண்டு நிறைவு


 மீண்டு வரமுடியாத பயணம் செய்துள்ள மக்கள் காதர் நெஞ்சினில் நீண்ட நாள் ஆசை மன்னார் மண்ணின் முழுமையான வரலாற்றினை தனது தம்பியான கலைவாதி கலீல் அவர்களுடன்  இணைந்து இறப்புக்குமுன்  எழுதி விட வேண்டும் என்று சொல்லுவார்.....நிறைவேறுமா........!!!
 மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,பிரபல எழுத்தாளரும்,கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் M.A.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று 10-06-2018ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.
  • 10-06-2018 -காலமானார்.
  • 10-06-2019 01ம் ஆண்டு நிறைவு
  • 30-05-2019 வியாழக்கிழமை 01ம் ஆண்டு நிறைவு-(கணிப்பின் படி)

04 ஆண்டுகளுக்கு  முன்  2014ம்  ஆண்டு  கண்ட நீண்ட செவ்வி  மறைந்தும் மறையாத மாணிக்கம் மன்னார் மண்ணின் மூத்த ஊடகவியலாளர் எழுத்தாளர் சிறந்த சமூக சேவையாளர்  எழுத்தியல் நாயகன் மக்கள் காதர் அவர்க்ளின் நினைவினை மீண்டும் நியூமன்னார் வாசகர்களுக்காக.....


 கணனியில் முகம்  கலைஞனின் அகம்

ஊடகவியலாளன் மனோதைரியத்துடன் உண்மையை சொல்லும் போதும் எழுதும் போதும் பின் விளைவுகளைப் பற்றி கற்பனை பண்ணிக் கூட பார்க்கவே கூடாது. மக்களின் பலன் நாட்டின் நலன் என்பவற்றை சிந்தித்து தீப்பொறி போல இருக்க வேண்டும்.


ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் உண்மையின் சின்னங்களாய் உறுதியாய் இருக்க வேண்டும் என்கிறார். 50 வருடங்களாக ஊடகவியலாளனாக பத்திரிகையாளனாக-நாடக நெறியாளனாக-கவிஞனாக-கட்டுரையாளனாக-சமூக தொண்டனாக பல வழிகளில் தன்னை இணைத்து இன்றும் இளைஞன் போல் இருக்கும் “எழுத்தியல் நாயகன்” மூத்த கலைஞர் மன்னார் மண்ணின் “மக்கள் காதர்” என அன்பாக அழைக்கப்படுகின்ற “அப்துல் காதர்” அவர்களின் அகத்தில் இருந்து....


தங்களைப்பற்றி.....

எனது தந்தை மதாறு முகைதீன் முகமது முகைதீன் (வரகவி)ää தாய்  மாதறு மீரா விம்மா நாச்சியா (புலவர); எனது மூத்த சகோதரர்களான வித்துவான் ரஹமான் பண்டிதர்.எம்.எ.இப்ராஹிம்ää ஆடை வடிவமைப்பாளர்ää எம்.எ.கபூர்(ஒளிப்பதிவாளர்ää நெறியாளர்ää படத்தயாரிப்பாளர்ää இளைய சகோதரர் கலைவாதி கலில் ஒவியர்ää கவிஞர்ää உப பீடாதிபதிää நவமணி பத்திரிக்கையின் உதவி  ஆசிரியர் இவ்வாறான கலைக் குடும்பத்தில் அதுவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள 3 கலைக் குடும்பங்களின் ஒரு குடும்பத்தவனாய் 14 பேரில் நான் “மக்கள்காதர்”என அடையாளப்படுத்தியுள்ளேன்.


மன்னார் வளம் பற்றி...........

மன்னாரில் அன்று 16ற்கு மேற்பட்ட குளங்களும் 5000 குடும்பங்களும் பனை 35 இலட்சமும் தென்னை 25 இலட்சமும் மற்றும் அனைத்து மரங்களும் சேர்த்து ஒரு கோடி இருந்துள்ளது. சராசரி ஒரு வீட்டில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்ததாக ஆதாரமுள்ளது. இன்று என்ன சொல்வதற்கு இருக்கிறது.


தங்கள் பாடசாலைக் காலம்...

1943ம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற காலப் பகுதியில் மன்னாரில் பிறந்த நான் எனது ஆரம்ப கல்வியை மன்ஃபுனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் சாதாரண தரத்தினை மன்ஃஅல் அ~;ஹர் மகா வித்தியாலயத்திலும் பயின்றேன். நான் பயின்ற காலத்தில் பல்கலைக் கழகங்கள் இலங்கையில் தோற்றம் பெறவில்லை.


நீங்கள் கால்பதித்த முதல் துறை பற்றி...
1964ல் மன்னரை தாக்கிய கொடிய சுறாவளியில் மன்னார் இரண்டாகப் பிரிந்து தீவப் பகுதியாகவும்-பெரும் நிலப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. மன்னாரை இணைத்த “சாம்போதி” அப்போதைய மன்னார் பாலம் முற்றாக அழிந்து போய் இருந்த காலத்தில் மன்னாரில் ஊழல் மிகவும் மோசமாக தாண்டவமாடின பொருட்களின் விலைää மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்த காலம். அக்காலத்தில் தான் பதுக்கல்ää சுரண்டல் ஊழல்களை எதிர்த்து 16 பக்கத்தில் 15 சதத்திற்கு விளம்பரம் இல்லாத “மக்கள்” எனும் பத்திரிகையை வெளியிட்டு நானே ஒவ்வொரு வீடாக கடையாக பாடசாலை எல்லா இடங்களிலும் விற்று வந்தேன். சிலர் வாங்கிக் கிழித்து வீசுவார்கள். சிலர் பேசுவார்கள். சிலர் திரத்துவார்கள். 3 அண்டுகள் தொடர்ச்சியாக செய்து பின் பொருளாதார சூழ் நிலை காரணமாக இடை நிறுத்தினேன். இதற்கு முழுக்காரணமாக இருந்தது.  1956 இல் மலை நாட்டில் இருந்து வெளியான செய்திப் பத்திரிக்கையான பத்திரிகை பெயர் “செய்தி”யில் வாராவாரம் வரும். அதில் செய்தியாளராக இருந்ததுதான். அதன்பின் செய்தியாளனாகää பத்திரிகைä-எழுத்தாளனாக என்னை மாற்றிக் கொண்டேன்.


அப்போது பிரபலமாய் விற்பனை செய்த பத்திரிகை பற்றி ...

நான் மன்னாரில் பத்திரிகை தாபனமாகவும் புத்தகக் கடை ஒன்றை ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் இலங்கையில் மிகவும் பிரபலமாக இரந்த பத்திரிகைகள்ää குணசேனா நிறுவனத்தின் ஊடாக வெளியான மூன்று மொழிகளிலும் தமிழில் “தினபதியும்” ஆங்கிலத்தில் “சண்” சிங்களத்தில் “தவச” வெளிவந்தது. “தினபதி” பத்திரிகையின் மன்னார் முகவராகவும் செய்தியாளனாகவும் என்னை இணைத்துக் கொண்டேன். அப்போது தினபதியூடாக மன்னாரில் விளையாட்டுப் போட்டிää நீச்சல் போட்டிää மாட்டு வண்டிச் சவாரி போட்டிகள் வைத்து பெரும் பரிசுகளையும் வழங்கியிருக்கின்றேன்.


உங்களின் திறமையினை இனம்கண்டு வெளிக் கொணர்ந்தவர்கள் பற்றி ...

எங்களை பொறுத்த வரையில் யாருமே வெளிக்கொண்டு வரவில்லை. நாங்களாகவே எங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வந்தோம். இதற்கு முழுக்காரணமும் எமது பெற்றோர்தான். அவர் இருவருமே கலைஞர்களாக இருந்ததினால் அவர்களின் கலையூற்று எம்மிலும் இயற்கையாகவே ஊற்றெடுக்க ஆரம்பித்தது எனலாம்.


மேலதிகமான விருப்பம் கொண்டிருந்தது


தையல் தறைதான். எனது சகோதரன் ஆடை வடிவமைப்பாளராக இருந்ததினால் நானும் ஈடுபாடு கொண்டேன். அந்த நேரத்தில் ஜப்பான் இறக்குமதியான “டீசழவாநச” எனும் பொத்தான் தைக்கும் இயந்திரம் 1000 ரூபா பெறுமதியில் வந்தது எனது பாடசாலையினை முடித்து விட்டு மாலையில் தையல் பயிற்சியிலே ஈடுபட்டென். மிகவும் மகிழ்ச்சியான காலம் அது.


“செய்தி”-“மக்கள்”- தினபதி”-“காலச் சுவடுகள்” என பழைய அந்தக்காலப் பத்திரிகைகளில் ஆசிரியனாக-செய்தியாளனாக இருந்த நீங்கள் தற்போது மன்னாரில் வரும் முதல் தினசரி பத்திரிகையான “புதியவன்” உப ஆசிரியராக இருக்கின்ற போது அன்றும் இன்றும் பத்திரிகையின் நிலை என்ன? கால மாற்றம் பற்றி... காலமாற்றம் எனும் போது நான் பத்திரிகைகளின் இணைந்த காலப் பகுதியில் வெறும் அச்சுக்களை கோர்த்து மீண்டும் கை வேலைப் பாடுகள் பல முறை செய்து சிறிய மோட்டர் மூலமும் மனித சக்தியின் மூலமும் வெளியிட்டார்கள். தற்போது நவீன யுகத்தில் Phழவழ உழில ழகக ளநவ pசiவெ இன்னும் நவீனமாக வந்து கொண்டுதான் இருக்கின்றது. அன்றைய பத்திரிகைகளை 70 வயது தாண்டியவர்களும் கண்ணாடி அணியாமல் வாசிக்கலாம். அவ்வளவிற்கு எழுத்து தெளிவாகவும் பெரிதாகவும் இருக்கும். இப்போது போட்டோகப் கொப்பி முறை ஆனதால் எழுத்துக்கள் மிகச் சிறியதாககண்ணாடி இல்லாமல் பார்க்கவே முடியாது. தேவையான விடயங்கள் அன்றைய பத்திரிகை தேவையற்ற விடையங்கள் நிறைய இன்றைய பத்திரிகை காலமாற்றம்தான்.


உங்கள் அனுபவத்தில் இருந்து ஊடகவியலாளனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எவை  என கருதுகிறீர்கள்?


ஊடகவியலாளனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாக அவன் முழு மனத் தையரியம் இருக்க வேண்டும். உண்மையை எழுதும் போதும் சொல்லும் பொதும் பின் விளைவுகள்  பற்றி எண்ணிக் கூட பார்க்கவே கூடாது. உண்மையானதை உள்ளதை உள்ள படி எழுத வேண்டும். சொல்ல வேண்டும். உளவாழியாகச் செயற்பட்ட உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். எது மக்களுக்கு தேவை நாட்டின் நன்மை பற்றி எண்ணியவனாக அவனது ஒவ்வொரு அசைவும் இருக்க வேண்டும்.


பத்திரிகையாளன் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்..

ஊடகவியலாளன் அச்சு ஊடகம்ää வானொலிää தொலைக்காட்சிää இணையம் எதவாக இரந்தாலும் அவர்களுக்கான கொலை மிரட்டல் ஊடகத்தின் வழியே விடப்படுகின்றது-பழி வாங்குதல்- பணக் குழுக்களின் மிரட்டல்-பாதாள குழுக்கள்-அரசியல் பிரமுகர்கள் மிகவும் மோசமான பயங்கரமான நிலை தனது உயிரை பணையம் வைத்து சில ஊடகவியலாளர்கள் பல குற்றங்களை-ஊழல்களை-கொலைகளை கண்டு பிடித்து வெளியிட்டு விடுகிறார்கள். அவர்களை பாராட்ட வேண்டும். அதே நெரத்தில் அவர்கள்  பாதுகாப்பு அவசியம். தற்போது யாழ்ப்பாணம்-கொழும்பில் நடந்த ஊடகவியலாளர்களின் இறப்புக்கு காரணம் அவர்களே தான். செய்தியை வெளியட்டால் நம்மை தேடுகிறார்கள் என்றால் 4 நாட்கள் மறைவாக இருக்க வேண்டும். இன்னொரு புதிய செய்தி வந்ததும் நம்மை மறந்து விடுவார்கள். அப்போது நாம் எமது வேலையை உயிர் இழப்பு இல்லாமல் செய்யலாம். தற்போதைய ஊடகவியலாளர்கள் நான் எழுதினேன் வெளியிட்டேன் என தம்பட்டம் அடிப்பதாலும் தனியே செல்வதாலும் தான் தங்களின் உயிரை இழக்கின்றார்கள்.

 இதுவரை நீங்கள் இவ்வாறான சூழலில் சிக்கியதுண்டா?

இதுவரை இல்லை. சகல ஊடகவியலாளர்களும் சொல்வார்கள். நாங்கள் பல முறை நிதிமன்றம்-விசாரனை 4ம்மாடி போனோம் நீங்கள் அதிஸ்ரசாலி தான் என்று. அவ்வாறில்லை நான் பத்திரிகையில் எழுதும் போது சம்பவத்தை தான் எழுதுவேனே தவிர சம்மந்தப்பட்டவர்களின் பெயர்ää விலாசம் விபரமாக எழுதுவதில்லை. அமைச்சராகட்டும் உறுப்பினராகட்டும் ஜனாதிபதியாகட்டும் அவரையும் விமர்சனம் செய்து எழுதுகிறேன். எழுதியும் இருக்கின்றேன்.சில விடையங்களை மேற்கோள் காட்டி-அகடவிகடமாக சம்பாஸணையை அப்படியே எழுதி விடுவேன். மக்கள் புரிந்து கொள்வார்கள். எது தேவையோ அதைத்தான் எழுத வேண்டும். கொலை-கொள்ளை-களவு-கற்பழிப்பு இதை பத்திரிகையில் போட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் எந்தவித நன்மையும் வந்துவிடப் போவதில்லை. முக்கியமான செய்தியினை எழுதும் போது தலைப்பு செய்தியின் அம்சம் சம்மந்தப்பட்டவர்கள் கடைசியாக நிருபரின் இறுதி முடிவாக சாரம்சம் அமைய வேண்டும்.


 பத்திரிகைகளுக்கு ஊடகவியலாளன் செய்தி பற்றி..

மன்னார் மாவட்டத்தில் 7 ஊடகவியலாளர்கள் தான் உள்ளார்கள். இவர்கள் சேகரிக்கும் செய்தி ஒரே தன்மையுடனும் எந்த விதமான எழுத்து வேறுபாடு இன்றி ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு இருக்க கூடாது. ஒவ்வொரு ஊடகவியலாளனும் தனக்கான ஒரு பாணியினை வைத்துக் கொள்ள வேண்டும் எழுத்தின் அமைப்பு-கவர்ச்சித் தன்மை-ஆங்கில உரை-நடை தவிர்ப்பு-தெளிவான சொற்தொடர்-உண்மைத் தன்மை வாசகன் மத்தியில் நம்பிக்கை தன்மை ஏற்படுத்த வேண்டும். ஊடகவியலாளன் ஒருவனுக்கு ஒருவன் துணையாக இருக்க வேண்டும்.


பத்திரிகையாளனுக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களுக்கும் இருக்கும் முரண்பாடுகள் பற்றி தங்களின் கருத்து..



இலங்கையில் மிகவும் நஸ்டமான தொழில் பத்திரிகைத் தொழிலும் பத்திரிகை விநியோகமும் தான் விற்பனையில்

டெய்லி நியூஸ்        3 இலட்சம் பிரதிகளும்

சிங்களப் பத்திரிகை    2 இலட்சம் பிரதிகளும்

வீரகேசரி பத்திரிகை    1 ½ இலட்சம் பிரதிகளும் விற்பனையாகின்ற போதும் இலங்கை சனத்தொகை 2 ½ கோடி அண்ணளவாக என்றாலும் வாசகர்களின் நிலை பற்றி சிந்தியுங்கள். தமிழ்ää சிங்கள பத்திரிகைகளை விட ஆங்கில பத்திரிகை அதிகமாக விற்பனையாகின்றது என்றால் அது படிக்க தெரியாவிட்டாலும் கௌரவத்திற்காக வாங்கும் கூட்டமும் உண்டு. பத்திரிகைத் தாபனங்கள்ää ஏதாவது அரசியல் அமைப்பையோ மதவாதியாகவோää மிதவாதியாகவோää கொள்கை வாதியாகவொ இருந்தாலும் விளம்பரத்தை நம்பித்தான். பத்திரிகைகள் வெளியாகின்றன்.

50 அயிரம் பிரதிகள் விற்கின்ற பத்திரிகையில் குறைந்தது 100 பேர் வேலை செய்வார்கள். பிரதம ஆசிரியர் -  ஆசிரியர் - உதவி ஆசிரியர்கள் - செய்தி பிரிவு - இன்னும் பல பிரிவுகள்

நல்லதொரு பத்திரிகைக்கு குறைந்தது 1000 நிருபர்கள் ஆவது இருப்பார்கள். இவர்களுக்கு மாதம் ஒன்றிற்குக் குறைந்ததொகை 5000 ரூபா படி கணக்கு பாருங்கள்..

மன்னாரைப் பொறுத்த வரையில் நாம் அனுப்பும் செய்திக்கான தொகை மன்னாரில் விற்பனையாகும் பிரதிகளில் தான் தங்கியுள்ளது.
முதல்     80     தற்போது    100    செய்தியொன்றுக்கு
முதல்     150    தற்போது    200    படத்துடன் செய்திக்குää முன்பக்கச் செய்திக்கு ஒருதொகையும்ää உள் பக்கச் செய்திக்கு ஒரு தொகையும் கொடுப்பார்கள். அதுவும் இணையம் வந்த பின்பு செய்தி அனுப்புதல் இலகுவானது தவிர எங்களது செய்திகள் 10 அனுப்பினால் இரண்டுää முன்றைத் தாறன் போடுவார்கள். மிச்சத்தை இணையத்தில் இருந்து கொப்பி பண்ண விடுகிறார்கள். நாம் எவ்வளவு அச்சுறுத்தல் அபாயங்களுக்கு மத்தியில் பயந்து பயந்த செய்தியை தொகுத்து வழங்கும் போது அதிலும் வெட்டிக் கொத்தி சுருக்குவதோடு சில வேலைகளில் கண் கொள்வதே இல்லை. இன்னும் தன்பங்கள் பல பத்திரிகையாசிரியருக்கும் பத்திரிகை முதலாளிக்கும் சின்னப் போராட்டம் தான். ஆனால் பத்திரிகையாசிரியருக்கும் நிருபர்களுக்கும் இது  வாழ்நாள் போராட்டமாகவே உள்ளது. முரண்பாட்டு மூட்டைகளை சுமந்து தான்...


  நீங்கள் மிகவும் சந்தோஷமடைந்த விடையம்...

1964ம் அண்டு வர்த்தக  வாணிப அமைச்சராக இருந்த வு.P.இலங்கைரெத்தின அவர்கள் இலங்கையில் இருந்த சிறிய வங்கிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து (கிராமிய வங்கி கூட்டுறவு வங்கி) பொது வங்கியாக அமைக்கவும் அதற்கு சிறந்த நாமத்தினை (பெயரினை) சூட்டும் போட்டியினை அறிவித்து இருந்தார். நானும் விளையாட்டாக தபாலட்டையில் அவரின் சேவையை பாராட்டியதோடு “மக்கள் வங்கி” என பெயர் வைக்கலாம் என எழதியனுப்பினேன். இரண்டு மாதங்கள் கழித்து எனக்கு பதில் வந்தது. தங்கள் தெரிவு செய்த பெயருக்காக தங்களுக்கு 5000 ரூபா பணப்பரிச என்று எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “சொற்களுக்கு உள்ள மகிமையை” அன்று உணர்ந்தேன்.


இதுவரை 50 ஆண்டுகளாக மன்னாரில் நீங்கள் சாதித்தது என்ன..
பல சாதனைகள் இருந்தாலும் பலருக்கும் தெரிந்திரா 4 சாதனைகளை குறிப்பிடலாம். அவையாவன என்றால்....


1.    முதலாவதாக மன்னாருக்கு வந்த இந்த சமாதானப் பாலம் 105 கோடி ரூபா செலவில் பாலத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்கள் வந்து இறங்கியும் வேலை தொடங்கவே இல்லை. ஓர் இரவு பெரிய வெடிச்சத்தம் தள்ளாடியில்  இருந்து செல் வந்து விழுந்தது. பாலத்தில் விடியற் காலையில் அனைத்து மிசினறிகள் பொருட்களை ஏற்றிக் கொண்டு போய் மதவாச்சிப் பாலத்தில் பறித்து விட்டார்கள். புலிகள்  அடித்து விட்டார்கள். இதனால் பாலம் கட்ட முடியாது என்று கதையை முடித்து விட்டார்கள். யுத்த காலம்தானே எனக்கு சுடர் ஒளி பத்திரிகை நல்ல ஒத்துழைப்பு தந்தது. பத்திரிகையில் மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் மன்னாருக்கு வந்த பாலம் “மர்மமான முறையில் மாயம்” எனும் தலைப்பில் பாலத்தின் மறைவிற்கு காரணம் புலிகளின் சதியா? இராணுவத்தின் சதியா..? மன்னாரில் உள்ள 6 எம்பிக்கள்ää அரசியல் வாதிகள் மாங்காய் மடையர்கள்-கையாலாகாதவர்கள் என காரசாரமாக எழுதினேன். பலமுறை  அப்போது பணியில் இருந்த அரசாங்க அதிபர் நீக்கிலஸ்பிள்ளை என்னை தீவிர விசாரனை.விசாரணையின் பின் நான் மீண்டும். எழுதியதன் பலனாக 152 கோடி ரூபா செலவில் பாலத்தில் கிழால் கப்பல் செல்லும் அளவில் கட்டப்படவிருந்த பாலத்தை தோணி போகும் அளவிற்கு கட்டி மீதிப் பணத்தினை சுருட்டியதோடு திறந்தும் வைத்தார்கள்.

2.    இலங்கையில் சமுர்த்தி 1994 இல் சிறிமா ஆட்சியின் போது “சனஜெயää சனசக்திää சமுர்த்தி” என பல தலைவர்களில் மாற்றம் கண்டு இன்று மன்னாரிலும் சமுர்த்திப் பயனாளிகள் 20000 பேர்கள் பயன் அடைகின்றார்கள் என்றால் அதுவும் எனது முயற்சி தான் பத்திரிகைகளில் பல முறை எழுதியதன் பலனாக மன்னார் நான்கு பிரதேச செயலகங்களுக்கும் உட்பட்ட 100 கிராம சேவகர்களின் விடா மயற்சியினால் மன்னாரில் “திவிநெகுமää வாழ்வின் எழுச்சி” என  பல உதவித் திட்டங்களை குறைந்த கொடுப்பனவாக 1000 ரூபாவும் கூடிய கொடுப்பனவு 2000 ரூபாவும் பிரசவத்திற்கு 5000 ரூபாவும்ää மின்சார வசதியும் சமுர்த்தி மூலம் மக்கள் பயன் அடைகின்றார்கள். ஆனால் இதிலும் சில அரசியல் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். நான் சவால் விட்டுள்ளேன். பல சமுத்திக் கூட்டங்களில் தனியாளனாக உருவாக்கினேன்..

3.    இலங்கையில் பிரேமதாஸ காலத்திலே “இணக்கசபை” என்ற அமைப்பு இருந்தது. இது இப்போது இலங்கையில் 350 மத்தியஸத சபைகள் உள்ளன. இச்சபையின்  செயற்பாட்டை பல வெளிநாடுகள் பாராட்டியுள்ளது. 5 ரூபா முத்திரையோடு இருதரப்பின் வாதப் பிரதி வாதங்களை கேட்டறிந்து சுமுகமான வழியில் தீர்வு கண்டு விடுவோம். பொலிஸ்ää நீதிமன்றம் என அலையத் தேவையில்லை. இச் சபை மன்னாரில் இல்லை. இக் குறையைப் பற்றி பல முறை பல பத்திரிகைகளில் எழுதியதன் பலனாக இரண்டு வருடங்களின் முடிவில் தற்போது மன்னாரில் மத்தியஸ்தசபை உள்ளது. அதில் நானும் ஒரு மத்தியஸ்தர் சபை உறுப்பினராக 14 பேரில் ஒருவனாக உள்ளேன்.

4.    மன்னார் வைத்தியசாலையில் நடைபெறும் ஊழலை தடுப்பதற்கான தற்போது புதிய பொறுப்புக் குழுவை நியமிக்கவுள்ளது. அதற்கான பல வழிகளில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். இன்னும் என்னால் பல விடயங்களை மேற்கொள்ளப்படவிருக்கின்றது. அதிலும் “மனித இல்லம்”“மனித உரிமை ஆணைக்குழு”யுத்தத்திற்கு முன்பு இல்லாமல் இருந்து தற்போது இந்த ஆண்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட ஆணைக்குழு மூடிய நிலையிலே தனது சேவையை வவுனியாவில் இருந்து செய்கின்றது. அளப்பரிய சேவை இன்னும் பல உள்ளன. இவைகளை தட்டிக் கேட்கவும் வெளிச்சம் போட்டுக் காட்டவும் ஊடகவியலாளர்களால் மட்டும் தான் முடியும். ஊடகவியலாளர்கள் சிறந்த சமூக சேவையாளர்கள் தற்போதுள்ள ஊடகவியலாளர்கள் ஏனோதானோ என ஒரு சிலர் செயற்படுகின்றனர். சகல வித வசதிகளும் இருந்தும் வைத்திய நிபுணர்கள்-தாதிமார் பற்றாக்குறை.


 மன்னார் தமிழ்ச்சங்கத்தின் சிரேஷ்ர உபதலைவராக உள்ள நீங்கள் தமிழ்ச் சங்கத்தின் பணி பற்றி..

முச்சங்கங்களை அமைத்து தமிழ் வளர்த்து மதுரையில் தான் வரலாறு உண்மை இப்போது பல நாடுகளில் தமிழையும் கலையையும் வளர்க்கின்றார்கள். அந்த வகையில் நானும் தமிழ்நேசன் அடிகளாரும் இன்னும் 100 இற்கு மேற்பட்ட புத்தி ஜீவிகள் கல்விமான்கள் இணைந்து 2010 ஆம் ஆண்டில் மன்னார் தமிழ் சங்கத்தை உருவாக்கினோம்.

•    செந்தமிழ் செம்மொழி விழா கொண்டாடி கலைஞர்களையும் கலையினையும் பறை சாற்றினோம். 18-20 இலட்சங்கள் செலவில்.

•    தமிழ்தூது தனிநாயகம் அடிகளாரின் 100 ஆண்டு விழாவைக் கொண்டாடினோம். 7-8 இலட்சம் ரூபா செலவில்.

• 01.09.2014 இல் தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 101வதுசிரார்த்த தின விழாவை அனுசரித்தோம்.

•    இதுவரை வெளிவந்த மன்னார் கலைஞர்களின் நூல்களின் படைப்புக்களை கண்காட்சியும் விற்பனையும் செய்ய எண்ணியுள்ளோம்.

•    மாதா மாதம் கலைஞர்கள் ஒன்று கூடலும் கலை விழாக்கள் கலைஞர்கள் கௌரவிப்பு படைப்புக்களை வெளிக் கொணர்தல் போன்றவற்றை செய்ய எண்ணியுள்ளோம். திட்டங்கள் பல இருந்தாலும் பொருளாதாரப் பிரச்சினைதான்.


கலையுலக வாழ்வில் நீங்கள் சந்தித்த வேதனையான விடையம் பற்றி..

2005 ஆம் ஆண்டு நோன்புக் காலத்தில் கருத்தரங்கு ஒன்றிற்காக எருக்கலம்பிட்டி சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதினால் எனது காலில் ஒன்று இரண்டு துண்டாக முறிந்து விட்டது.  மரணத்தின் விளிம்பில் தான் இருந்தேன். அநுராதபுரத்தில் வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் போது சுகர் 408 இல் இருந்தது. 2-3 மாதங்கள் வைத்தியசாலையிலும் இரண்டு வருடங்கள் வீட்டிலும் நடமாட்டம் இல்லாமல் படுத்தபடுக்கையாக முடங்கி கிடந்தேன். இந்த விபத்து எனக்கு நல்ல படிப்பினையை தந்தது என்று சொல்வேன்.“தர்மம் தலைகாக்கும் தற்க சமயத்தில் உயிர் காக்கும்” என்ற பாடலை சும்மா விளையாட்டாகத் தான் எண்ணி இருந்தேன்.


இந்த விபத்தின் பின்தான் சமூக சேவை தலை காக்கும் தற்க சமயத்தில் உயிர்காக்கும் என்று மாற்றி பல மேடைகளிலும் பேசியுள்ளேன். எனது சமூக சேவையே எனது உயிரைக் காத்தது. இன்னும் சேவை செய்வதற்காக விபத்தின் பின்பு தான் நான் என்னை முழுமையாக உணர்ந்தேன். பல பதவிகளும் என்னை தேடி வந்தது. அதிலும் தமிழ்ச் சமூகம் என்னை மிகவும் மரியாதை செய்கின்றது. அதிலும் கிறிஸ்தவர்கள் பங்கு தந்தையர்கள் ஆயர் அவர்கள் என்னில் அதிக அன்பு செலுத்துகின்றார். எனது விபத்தின் போதும்-எனது மனைவி இறந்த போதும் என்னை ஆயர்கள் குழுவாக வந்து ஆறுதல் வார்த்தையினை அன்பை வழங்கினார்கள்.


  71 வயது கலைஞரான நீங்கள் ஊடக வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி......... :

ஊடகவியலாளனாக நான் எழுதிய போதும் பேசிய போதும் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் எனது சமூகம் எனது மனைவியிடம் தான் சென்று முறையிடுவார்கள். தேவையில்லாமல் பல செயல்களில் ஈடுபடுகின்றார். அவரை சும்மா இருக்கச் சொல்லு என்பார்கள். எல்லாவற்றையும் கேட்கும் என் மனைவி உங்களுக்கு சரியென்று படுவதை தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் கடமையினை நீங்கள் தான் செய்ய வேண்டும் என்பாள.; என் மனைவி இறக்கும் வரை எந்தவிதமான எதிர்ப்பினையும் எனக்கு காட்டவில்லை.

என் மனைவி உயிரோடு இருக்கும் வரை அவளின் அருமை எனக்கு தெரியவில்லை. அவளுடன் 45 வருடங்கள் வாழ்ந்தாலும் அவளை நான் சந்தோஸமாக வைத்திருந்தேனா-2 பவுனுக்கு மேல் நான் வாங்கிக் கொடுத்ததில்லை. சீதனமாக அவளிடம் இருந்து வேண்டிய 35 பவுணில் 15 பவுணில் தாலி கட்டினேன். நான் பத்திரிகை சமூகப் பணி என ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒவ்வொன்றாக தந்து கடைசியில் தாலிக் கொடியினை விற்று விட்டேன். கடன்காறியாக வேறு அவளை ஆக்கி விட்டேன். இரண்டு வருடங்கள் விபத்தின் பின் மலமும் சலமும் படுத்தபடுக்கையில் தான் என்னை அவ்வாறு கவனித்தாள். இறுதியாக இறக்கும் போது கூட எனது மகளிடம் கடன் இல்லாமல் வாழுங்கள் என்று சொல்லி கண்மூடி விட்டாள். அன்று அழுதனான் இனி எப்போதும் அழப் போவதில்லை. கடனும் வாங்கப் போவதில்லை. என் நெஞ்சில் வாழ்கின்றாள் என் மனைவி.


 “அப்துல் காதர்” எனும் இயற்பெயர் கொண்ட நீங்கள் ‘மக்கள் காதர்” ஆனது பற்றி ..

அது மிகவும் சுவையான கதை. அது தானாக நிகழ்ந்தது. 1964 “மக்கள்” எனும் பத்திரிகை நடத்தி பொருளாதார சிக்கல் காரணமாக இடைநிறுத்தியிருந்தேன். அதன்பின் செய்தியாளனாகவும் 1990 இல் இடம் பெயர்ந்து புத்தளத்தில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தேன். அன்றும் எனது சம்பளம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்று கொண்டு இருக்கின்றேன். ஒரு குரல் கேட்கிறது. கலீல் எங்க போறீங்கள்” திரும்பிப் பார்க்கின்றேன். அப்போது முஸ்லீம் கலாச்சார விவகார அமைச்சர் அஸ்வர் MP அவர்கள் அஸ்லாமு அழைக்கும் ஹாஜி நான் கலில் இல்ல. கலில் எனது சகோதரர் நாங்கள் இரட்டையர்கள். கலீல் உங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே. (எனது இளைய சகோதரர் கலீல் அமைச்சர் அவர்களின் செயலாளராக இருந்தார்.) நீங்கள் தற்போது என்ன செய்கிறீர்கள் என்றதும் எனது பத்திரிகை நின்று போனதை பற்றி விளக்கமாகச் சொன்னேன். அதை கேட்ட அமைச்சர் அவர்கள் தான் மக்கள் பத்திரிகை மீண்டும் தொடங்கவும் மக்கள் பத்திரிகை பெயர் அழியாமல் இருக்கவும் இன்று முதல் நீங்கள் “மக்கள் காதர்” பட்டத்தை நானே தருகின்றேன் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை எனது அடையாளம் “மக்கள் காதர்” தான்.

இதுவரை உங்கள் படைப்புக்கள் ஏதும் நூல் உருவம் பெற்றுள்ளதா...?

இதுவரை இல்லை. இரண்டு காரணம் உண்டு எனது வறுமை மன்னாரில் வெளியீடு செய்யும் கலைஞர்களின் நிலையினை நேராக கண்டுகொண்டதினால் வெளியிடும் ஆசையே எனக்கு இல்லாமல் போனது. மன்னாரில் போதிய வரவேற்பும் ஊக்குவிப்பும் இல்லை. போன வாரம் இந்தியாவில்  புத்தக கண்காட்சி வைத்தார்கள். கண்காட்சியும் விற்பனையும் சுமார் 5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. படித்தவர்களும் படிக்காதவர்களும் வாசகர்களும் இந்தியாவில் தான் உள்ளனர். இந்தியாவில் தான் 3ம் வகுப்பு படித்தவன் விரும்பி புத்தகம்-பத்திரிகைகள் படிப்பான்-இலங்கையில் BA படித்தவன் புத்தகமோ பத்திரிகையோ படிக்க மாட்டான் மக்களின் மனநிலை வேறுபடுகின்றது.

தங்களின் அனுபவத்தில் இருந்த தற்கால இளைஞர் யுவதிகளுக்கு சொல்ல நினைப்பது என்ன...

இந்த நவீன யுகத்தில்அபார வளர்ச்சிப் போக்கில் தற்போதுள்ள இளைஞர் யுவதிகள் எங்களுடைய காலத்தை போன்றதல்ல கைத்தொலைபேசியில் இருந்து இணையம் வரை எத்தனை விதமான படிப்புக்கள் தாங்களாகவுவ கற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் அவர்கள் கற்கும் முறைதான் பல சந்தர்ப்பங்களில் பிழையான வழியாகின்றது. சீரழியும் நிலை உருவாகியுள்ளது. பெரியோரை மதித்து அவர்களின் அறிவுரையை கேட்பதில்லை. ஒரு குழந்தை பிறப்பும் வளர்ப்பும் சரியான முறையில் இருக்க வேண்டும். 5-10 வயது வரை தான் குழந்தைகளை ஒழுக்க ரீதியாக மதத்தின் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவந்த சமுதாயத்தின் முன் நல்லதொரு பிள்ளையாக நிலை நிறுத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்கு பாலியல் கல்வியின் அவசியம் பொருளாதாரம்ää அரசியல் தன்மை என்பவற்றுடன் ஒழுக்கத்தையும் பேணிக்காப்போமானால் இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையின் அசைக்க முடியாத இளைஞர் யுவதிகளின் படையணியை காணலாம்.


 இதுவரை உங்கள் வாழ்வில் இலக்கை அடைந்து விட்டீர்களா? இன்னும் திட்டங்கள் ஏதும் உள்ளதா...

எனது இலக்கை 50% தான் அடைந்து உள்ளதாக எண்ணுகின்றேன். எனது ஆசை என்னவென்றால் மன்னாரில் இருக்கின்ற ஊனமுற்றோர் 300 பேர்கள் உள்ளனர். அவர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். உள்நாட்டிலும்ää வெளிநாட்டிலும் உதவியைப் பெற்று மாதாமாதம் உதவு தொகை வழங்குவதற்கு எண்ணியுள்ளேன். மன்னாரில்  உள்ள வசதியற்ற கலைஞர்களுக்கு எனது மூத்த சகோதரர்களின் நினைவாக “வித்துவான் சகோதரர் நிதியம்” அமைப்பை நிறுவியுள்ளேன். இவ் அமைப்பின் ஊடாக ஊனமுற்றோர் ஊக்கத் தொகை வழங்க தீர்மானித்துள்ளேன். மிக விரைவில் செயற்படுத்துவேன்.


  இதுவரை தாங்கள் வகித்த வகிக்கின்ற பதவிகள் பற்றி..

    சிரேஸ்ர உபதலைவர்        -   மன்னார் தமிழ்ச் சங்கம்
    செயலாளர்            -            மன்னார் சர்வ மதப் பேரவை
    அங்கத்தவர்            -    மன்னார் பிரதேச கலாச்சாரப் பேரவை
    அங்கத்தவர்            -    மன்னார் பிரதேச மத்தியஸ்தர் சபை
    தலைவர்            -    மன்னார் நகர இரு மொழிச் சங்கம்
    உபதலைவர்            -    மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கம்
    உதவி ஆசிரியர்        -    மன்னார் முதல் தினசரி பத்திரிகை “புதியவன்”
    “செய்தி”-“தினசரி”   -  செய்தியாளர் நிருபர்
    “மக்கள்”            -    ஆசிரியர் - சொந்தப் படைப்பு
    “காலச் சுவடுகள்”        -    உதவி ஆசிரியர்.
     இன்னும் பல அமைப்புக்களில்  பணியாற்றுகின்றேன்.....


  இதுவரை தங்களின் சேவையை பாராட்டி தந்த பட்டங்கள் விருதுகள்

•    ஊடகவியலாளர் கௌரவிப்பு சின்னம் - 2008

மன்னார் பிரதேச செயலகம் கலை இலக்கிய விழா

•    இலங்கை முஸ்லீம் பேரவையினால் “எழுத்தியல் நாயகன்”விருது 2009

•    வடமாகாண சபையினால் “ஆளுநர் விருது” 2010

•    செந்தமிழ் செம்மொழி நினைவுச் சின்னம்

•    மன்னார் மும்மொழிச் சங்கம் “வாழ்நாள் சாதனையாளர் விருது”

         கலைஞர் சுவதம் விருது- 2017
    இவற்றோடு பல மேடைகளில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்துள்ளேன்
    இவ்வளவுதான் ஞாபகத்தில் உள்ளது


   மன்னார் கலைஞர்களுக்கு மணி மகுடம் சூட்டும் மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து..

நான் அதிகமாக இணையங்கள் பார்ப்பதில்லை. எனது மகன் சிறிய மடிக் கணனி ஒன்றை இரு மாதங்களுக்கு முன்புதான்  வாங்கித் தந்தார் அன்றிலிருந்து தான் இணையத்தை பார்க்க ஆரம்பித்தேன். மன்னார் சார்பாகவுள்ள மூன்று இணையத்திலும் மன்னார் இணையம் (நியூ மன்னார் இணையம்) தான் மேல் நாட்டு இணையத் தளங்கள் போல மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு ஒவ்வொன்றும் தலைப்புக்கள் இட்டு தொகுப்புக்கு அற்புதமாகவுள்ளது. எனது வாழ்நாளில் இது இரண்டாவது மிக நீண்ட நேர செவ்வி என்பேன். மன்னார் இணைய நிர்வாகிக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகுக.


சந்திப்பு : வை. கஜேந்திரன்-












மறைந்தும் மறையாத மாணிக்கம் மன்னார் மண்ணின் மூத்த ஊடகவியலாளர் "எழுத்தியல் நாயகன்" மக்கள் காதர்-1ம் ஆண்டு நிறைவு Reviewed by Author on June 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.