அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களிடம் கையேந்தி சம்பளம் வழங்கும் நிலை

 கடந்த பல வருடங்களாக வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கல்வி செயற்பாடக இருக்களாம் விளையாட்டு துறையாக இருக்கலாம் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து வருகின்றது மன்னார் மாவட்டம் குறிப்பாக சொன்னால் உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை என அனைத்திலும் வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட முன்னிலையில் மன்னார் கல்வி வலயங்கள் காணப்படுகின்றது சனத்தொகையிலும் நிலப்பரப்பிலும் ஏனைய மாவட்டங்களை ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டாலும் கல்வியிலும் விளையாட்டுக்களிலும் எந்த காலத்திலும் விட்டுக்கொடுப்பின்றி முன்னிலையில் நிற்கின்றது மன்னார் மாவட்டம் ஆனாலும் மாகாண கல்வி அமைச்சு மற்று மத்திய கல்வி அமைச்சின் சில செயற்பாடுகளால் எமது எதிர்கால அடைவு மட்டம் கேள்வி குறியாகவே உள்ளது 

மன்னார் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பல பாடசாலைகளில் போதிய அளவு ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதித்துள்ளது குறிப்பாக மன்னார் வலயக்கல்வி பணிமனை மாத்திரம் இன்றி மடு வலய கல்வி பணிமைனை பிரிவுகளில் உயர் தர வகுப்புகளுக்கு முக்கிய பாடங்களுக்கான நீண்ட நாள் வெற்றிடம் காணப்படுகின்றமை மாகாண மற்றும் மத்திய கல்வி அமைச்சின் சீரற்ற நிர்வாக கட்டமைப்பை எடுத்து கூறுகின்றது மன்னாரில் பல தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் உயிரியல் மற்றும் கணித பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இன்மையால் பிரத்தியோக ஆசிரியர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து பழைய மாணவர்களிடம் கையேந்தி பணம் பெற்று கற்பிக்கும் நிலை காணப்படுகின்றது 

 குறிப்பாக மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் மூன்றுவருடம்களுக்கு மேலாக பெளதீகவியல் பாடத்திற்கான ஆசிரியர் இன்மையால் மாணவர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் தனியார் ஆசிரியர் ஒருவரை வாடகைக்கு அமர்த்தி கற்பிக்க வேண்டிய நிலையில் குறித்த பாடசாலை இயங்கி வருகின்றது மாவட்டத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கே இந்த நிலமை என்றால் ஏனைய பாடசாலைகளின் நிலமை எவ்வாறு இருக்கும் என்பது விடை தெரியாத கேளிவியாகவே உள்ளது

 ஏனைய மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உடன் பூர்த்தி செய்யப்படுகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் வெற்றிடங்கள் அனைத்தும் வெற்றிடமாகவே காணப்படுவதற்கு யார் காரணம்? மாவட்ட ஒருங்கிணைப்பு குழு பாராளுமன்றம் என அனைத்து இடங்களிலும் பேசியும் தீர்வு கிடைக்காமைக்கு காரணம் என்ன? பல வைத்தியர்களை பொறியியளாலர்களை உருவாக்க வேண்டிய மாவட்டம் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணாமாக பின்னோக்கி செல்வது எந்த அளவிற்கு ஏற்க கூடியது என்பதை பற்றி ஜோசிக்க வேண்டிய தருணம் இது அல்லவா யாழ்பாண மாவட்டத்தில் பல கல்வி வலயங்களில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியில் காணப்படுகின்ற போது மாகாண ரீதியில் ஆசிரியர் வள பங்கீடு என்பது ஒரு தலை பட்சமாக காணப்படுவதுடன் ஆசிரியர்களின் வளபங்கீடு தொடர்பான சரியான தகவல்கள் கூட மாகாண கல்வி அமைச்சில் காணப்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் வெளிப்படுத்த முயலும் சமயத்தில் அவர்களும் நிர்வாக ரீதியில் பழிவாங்கப்படுவதையும் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றப்படுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது 

 பல ஆசிரியர்கள் அரச சம்பளங்களை பெற்று பதவி வெற்றிடம் இல்லாவிட்டாலும் தங்கள் சொந்த ஊரிலே அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பணி புரியும் நிலையில் மன்னாரில் பல இடங்களில் சில ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பாடசாலைகளில் கடமை புரிய வேண்டிய அவல நிலை மன்னாரில் காணப்படுகின்றமை சிந்திக்கப்படாமல் இருப்பது வேதனைக்குறிய விடயமாகும் கல்வி அனைவருக்கும் சமனாது நீண்ட யுத்ததின் வடுக்களை சுமந்த எம் மண் மீள கல்வி மட்டுமே கைகொடுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை எனவே வட மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி சம அளவில் பகிரப்படவேண்டும் பிரதேச வாதத்தால் எமது மாணவர்களின் கல்வி சீர்குலையக்கூடாது 

 குறித்த விடயத்தில் வடமாகாண ஆளுனர்,மாகாண கல்வி அமைச்சு,மற்றும் மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக தலையிடவேண்டும் எந்த மாவட்டமாக இருந்தாலும் வளப்பகிர்வு சரியாக இடம் பெற வேண்டும் ஏனைய மாவட்டங்களில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் வள குறைபாடு உள்ள மாவட்டங்களுக்கு இடமாற்றபட வேண்டும் ஆளனி பற்றாக்குறை வலய ரீதியாக பூர்த்தி செய்யப்படவேண்டும் குறிப்பாக உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை மாவட்ட ரீதியாக ஆய்வு மேற்கொண்டு மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கள் சீர்படுத்த வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் கல்வி என்பது எமக்கு எட்டாக்கணி என்பது திண்மம்.


மன்னாரில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களிடம் கையேந்தி சம்பளம் வழங்கும் நிலை Reviewed by Author on December 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.