அண்மைய செய்திகள்

recent
-

உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் சௌத்பார் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்வு.

உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் கறிராஸ்-வாழ்வுதயத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் மிசறியோ நிதியுதவியில் நீண்ட நாட்களாக மன்னார் சௌத்பார் கிராமத்தில் பாவனையற்று இருந்த பொதுக்கிணறு புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை (22) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீர் தினத்தின் முக்கியத்துவம், தற்கால நீரின் சவால் போன்ற விடயங்களை உணர்த்தும் முகமாக கவனயீர்ப்பு ஊர்வலமும், கருத்தமர்வும் இடம் பெற்றது. 

 குறித்த நிகழ்விற்கு கறிராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை.அன்ரன் அடிகளார், தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் தொழில்நுட்ப உதவியாளர் பாலசிங்கம் தயாபரன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் .அ.றெஜிவோல்ரன், வன திணைக்களத்தின் வன விரிவாக்கல் உத்தியோகத்தர் .அருண்ராஜ், வனவிலங்கு திணைக்கள அதிகாரி ரிசர ஹம்புகே, சௌத்பார் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர், இளையோர், என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.












உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் சௌத்பார் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்வு. Reviewed by Author on March 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.