மரதனில் கலந்து கொள்ளச் சென்ற மகனை ஊக்குவிக்கச் சென்ற தந்தை பரிதாபமாக பலி
>புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பெல்மடுல்ல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
பெல்மடுல்ல படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட தனது மகனை ஊக்குவிக்க வந்த தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தந்தை தனது 16 வயது மகனை பாதுகாக்கவும், ஊக்குவிற்பதற்காகவும் அவருடன் இணைந்து ஓடியுள்ளார்.
இதன்போது, 60 வயதுடைய தந்தை திடீரென மயக்கமடைந்து மயங்கி விழுந்து பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரதனில் கலந்து கொள்ளச் சென்ற மகனை ஊக்குவிக்கச் சென்ற தந்தை பரிதாபமாக பலி
Reviewed by Author
on
April 16, 2024
Rating:
No comments:
Post a Comment