அண்மைய செய்திகள்

recent
-

மடுத்திருத்தல ஆடித்திருவிழா நேற்று (23-06-2011)கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கத்தோலிக்க மக்களின் புனித ஸ்தலமாக விளங்கும் மடுமாதா ஆலயத்தின் ஆடித்திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி திருவிழா நடைபெறவுள்ளதால் 1 ஆம் திகதிவரை மாலை நவநாள் வழிபாடுகள் நடைபெறும்.



மடுத்திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஆன்மீக எண்ணத்துடனும் பக்தி முயற்சிகளில் ஈடுபடுபவர்களாகவும் வரவேண்டும் எனவும் கேளிக்கை மற்றும் உல்லாசப்பயண நோக்கத்துடன் வரக்கூடாது எனவும் மடுப்பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பக்தர்கள் எமது கலாசார முறையிலான உடைகளை அணிந்து வருமாறும் அவர் கேட்டுள்ளார். இம்முறை பெருமளவு பக்தர்கள் வரவுள்ளதால் அவர்களின் வாகனங்கள் மீதான படையினரின் சோதனைகளை இலகுபடுத்துமாறும் அவர் படை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மடுமாதா ஆலயத்திருவிழா வருடாந்தம் ஆடி 2 ஆம் திகதியும் ,ஆவணி 15 ஆம் திகதியும் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மடுத்திருத்தல ஆடித்திருவிழா நேற்று (23-06-2011)கொடியேற்றத்துடன் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on June 24, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.