மன்னாரில் இராணுவத்தினர் குடும்பப்பதிவு திரட்டல்
மன்னாரில் இராணுத்தினர் கூடும்பப்பதிவுகளை மேற்கொண்டு வரும் நிலையில் மன்னார் மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள மொழி மூலமான படிவங்களை வீடு வீடாக கொண்டு செல்லும் இராணுவத்தினர் குடும்ப விபரங்களை பதிவு செய்வதோடு வீட்டில் வேறு யாராவது இருக்கின்றார்களா? என்பதனையும் கேட்டரிந்து கொள்ளுகின்றனர்.
குறித்த இராணுவத்தினர் சிங்கள மொழியில் கதைப்பதனால் மக்களினால் விளக்கத்தினை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
பொலிஸாரே அல்லது கிராம அலுவலகர்கலே கூட செல்லாத நிலையில் இவர்கள் குடும்பப்பதிவினை மேற்கொண்டு வருகின்றனர்.
பதிவுகள் அணைத்தும் சிங்களத்தில் காணப்படுவதினால் எந்த விடையத்தை பதிவு செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை.
இருதியில் குடும்பத் தலைவர்களிடம் கையொப்பத்தினையும் பெற்றுக் கொள்ளுகின்றனர்.
ஏன்?எதற்கு?இந்த பதிவுகள் என்ற விடையம் தெரியவில்லை. மன்னார் மாவட்டத்தில்சிவில் நிர்வாகத்தில் அதிகலவில் இராணுவம் தலையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இராணுவத்தினர் குடும்பப்பதிவு திரட்டல்
Reviewed by NEWMANNAR
on
August 01, 2011
Rating:
No comments:
Post a Comment