அவசரகால சட்டத்தை தக்கவைக்க அரசினால் நிர்மாணிக்கப்பட்ட பயங்கரவாதமே "கிறீஸ் பூதம்' _
சர்வதேசத்துக்கு எவ்வாறான கதைகளைக் கூறினாலும் அல்லது உறுதி மொழிகளை வழங்கினாலும் அவசர காலச் சட்டத்தை நீக்கிவிடுவதற்கோ, வடக்குகிழக்கை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை அங்கிருந்து அகற்றுவதற்கோ அரசாங்கத்திடம் திட்டம் இல்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்குறித்த இரண்டையும் தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே கிறீஸ் பூதம் இல்லாவிட்டால் மர்ம மனிதன் என்ற பயங்கரவாதத்தை அரசு நிர்மாணித்திருக்கின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
மர்ம மனிதன் அல்லது கிறீஸ் பூதம் என்ற சம்பவத்தில் வவுனியா, கோமரசன் குளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களில் 10 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இது நாட்டையும் குழப்பி மக்களையும் ஒருவித பீதிக்குள் தள்ளிவிடுகின்ற மிக மோசமான செயற்பாடாக அமைந்திருப்பதாகவும் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறுகையில்,
மர்ம மனிதன் இல்லாவிட்டால் கிறீஸ் பூதம் என்ற பயங்கரமானது நாட்டை பீதியில் ஆழ்த்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை மேற்படி கிறீஸ் பூதம் என்கின்ற பயங்கரம் குறி வைத்திருக்கின்றது.
வடக்கு கிழக்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் கடந்த காலங்களில் எமது மக்கள் அச்சத்திலும் பீதியிலும் ஓடி ஒளிந்து திரிந்தனர். தற்போது யுத்தம் நிறைவடைந்த பின்னரும் எமது மக்கள் தன்னிறைவு பெற்றிராத போதிலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சீவியம் நடத்துகையில் அதற்கும் இடையூறு செய்யும் வகையிலேயே இந்த கிறீஸ் பூதம் என்ற பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
மன்னாரின் கள்ளியக்கட்டைக்காடு, புதுக்கமம், சாத்தான்குளம், சமயபுரம், வட்டுத்திட்டுவான் மடு மற்றும் அரிப்பு ஆகிய பகுதிகளிலும் அதேபோல் வவுனியாவில் கோமரசன் குளம், சூடு வெந்த புலவு மற்றும் சிதம்பரபுரம் ஆகிய பகுதிகளிலும் மேற்படி மர்ம மனிதனின் அட்டகாசங்களினால் எமது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மாலை 6 மணியின் பின்னர் விடியும் வரையிலான காலப் பகுதியில் மக்கள் நிம்மதியிழந்து காணப்படுகின்றனர். இதே நிலைமைகளை கிழக்கின் பல பகுதிகளிலும் காண முடிந்தது.
நேற்று முன்தினம் இரவு கோமரசன்குளப் பகுதிக்குள் மர்ம மனிதனின் பிரவேசத்தால் அப்பகுதி அல்லோலகல்லோலம் எழுந்தது.
இதனையடுத்து பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக தற்போது பொதுமக்களில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மர்ம மனிதன் என்ற விடயமானது அருவருக்கத்தக்கதாகவே அமைந்திருக்கின்றது.
வடக்கு கிழக்கு தற்போது இராணுவ மயத்துக்குள் சிக்கியிருக்கின்றது. இதனை விடுவித்து இங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை.
மறுபுறத்தில் அவசரகாலச் சட்டத்தை நீக்கவிருப்பதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கு கூறி வருகின்றமையானது அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறு கூறுகின்ற அரசு அதனை நீக்காமல் இருப்பதற்கான வழி வகைகளை தோற்றுவிக்கின்றது. இதன் ஒரு கட்டம்தான் கிறிஸ் பூதம் என்ற பயங்கரவாதமாகும். இதனை அரசாங்கமே நிர்மாணித்திருக்கின்றது.
நாட்டைப் பதற்ற நிலைக்குள் தள்ளி அதனைக் காரணம் காட்டி அவசர காலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருப்பதே இதன் திட்டமாகும். இது இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மையாக அமையப் போவதில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
பதற்றத்தை தணித்து இயல்பு நிலையைக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும். எனினும் இங்கு அவ்வாறான நிலைமையைக் காண முடியவில்லை. பொலிஸார் தமது கடமையைச் சரிவர செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழ் பேசும் மக்களைக் குறி வைத்துள்ள கிறீஸ் பூதம் என்ற பயங்கரவாதம் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமானதொரு முடிவுக்கு வர வேண்டும் என்றார்.

Reviewed by NEWMANNAR
on
August 23, 2011
Rating:

No comments:
Post a Comment