தலைமன்னாரில் 1 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னாரில் 1 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலை அடுத்து தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 500 கிராம் நிறை கொண்ட கெரோயின் போதைப்பொருளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மன்னால் பொலிஸ்நிலைய தலைமையக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த போதைப்பொருளை மீட்டுள்ளதோடு 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
வீட்டில் உள்ள அலுமாரி ஒன்றினுள் மறைத்து வைத்திருந்த மூன்று பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். பின் அதனை அதனை சோதனைக்குற்படுத்திய போது அப்பொதிகள் அனைத்திலும் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டமை தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த வீட்டில் இருந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரை தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் 1 கிலோ 500 கிராம் நிறை கொண்டதாகவும் இதன் பெறுமதி 1 கோடி ரூபாய் எனவும்; தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமன்னாரில் 1 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Reviewed by NEWMANNAR
on
October 27, 2011
Rating:

No comments:
Post a Comment