அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எரிவாயு வளம் வியட்நாமுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை!


மன்னாரை அண்டிய கடற்படுகையில் காணப்படும் எரிவாயு வளத்தை வியட்நாமுக்கு விற்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கெய்ன்ஸ் லங்கா இந்திய நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம்முதல் அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்ததை அடுத்தே எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டது.

மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு மேற்கொள்வதற்கான பிரதேசம் எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் இரு பகுதிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியில் ரஷ்யா எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதிதாக உருவாகியுள்ள எரிவாயு வளம் பெறுதல் தொடர்பான ஒப்பந்தமொன்று அண்மையில் வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வியட்நாமிய அரசின் கீழ் இயங்கும் பெற்றோ வியட்நாம் எக்ஸ்புளறேசன் புறடக்சன் நிறுவனத்தின் பொறியியலாளர்கள் குழுவொன்று இன்னும் சில நாள்களில் இதற்கென இலங்கைக்கு வரவிருக்கின்றது.
இந்தக்குழுவினர் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆய்வுப் பகுதியில் எரிவாயு வளம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதுடன் அகழ்வுப் பணிகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த நிறுவன உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதியின் அண்மைய இலங்கை விஜயம் குறித்து பிரபல்யப்படுத்திய இலங்கை அரசு எரிவாயு வளம் தொடர்பாக இரு நாடுகள் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தத் தவறியுள்ளது.
உலகின் 18 நாடுகளில் மொத்தமாக 23 எரிவாயு மற்றும் பெற்றோலிய எரிபொருள்கள் அகழ்வு நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொண்டு வரும் வியட்நாமிய அரசு தனது புதியதொரு திட்டமாக இலங்கையின் எரிவாயு வளத்தை கைப்பற்றிக் கொண்டுள்ளது.
மன்னார் எரிவாயு வளம் வியட்நாமுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை! Reviewed by NEWMANNAR on October 26, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.