அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டானில் இரண்டு சகோதரிகள் கிணறு ஒன்றிலிருந்து உடலமாக மீட்கப்பட்னர்! -2 ம் இணைப்பு

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளம் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இரு பெண்கள் இன்று காலை கிணறு ஒன்றினுள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்.மன்னார் நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளம் கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த ராசு நாகலக்ஷ்மி (வயது-43), தனிநாயகம் ராஜலக்ஷ்மி (வயது -45) ஆகிய இரண்டு சகோதரிகளும் நேற்று புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இருவரையும் அவர்களுடைய உறவினர்கள் இன்று வியாழக்கிழமை காலை தேடிய போது இருவரும் அதே கிராமத்திலுள்ள கிணறு ஒன்றில் சடலமாக காணப்பட்டனர்.
இதனையடுத்து முருங்கன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த முருங்கன் பொலிஸார் இரு சடலங்களையும் மீட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மன்னார் நீதவான் திருமதி கே.ஜீவரானி மன்னார் வைத்தியசாலைக்குச் சென்று சடலங்களை பார்வையிட்டதோடு குறித்த இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தமாறு உத்தரவிட்டதோடு சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நானாட்டானில் இரண்டு சகோதரிகள் கிணறு ஒன்றிலிருந்து உடலமாக மீட்கப்பட்னர்! -2 ம் இணைப்பு Reviewed by NEWMANNAR on October 21, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.