நானாட்டானில் இரண்டு சகோதரிகள் உடலமாக மீட்கப்பட்னர்!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னார் காணாமல் போனதாக பெற்றோரால் தேடப்பட்டுவந்த இரண்டு சகோதரிகளின் உடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள் . இரண்டு சகோதரிகளின் உடலங்களையும் எடுப்பதற்கு முருங்கன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து பின்னர் மன்னார் பொதுமருத்துவமனைக்குஉடல் பரிசோதனைக்காக உடலம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சகோதரிகளின் படுகொலையினைத் தொடர்ந்து பிரதேசத்தில் மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.
மன்னார் மாவட்டத்திலும் அண்மைய நாட்களில் மர்மகொலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டானில் இரண்டு சகோதரிகள் உடலமாக மீட்கப்பட்னர்!
Reviewed by NEWMANNAR
on
October 20, 2011
Rating:

No comments:
Post a Comment