அண்மைய செய்திகள்

recent
-

3 வது ஆண்டில் தடம் பதிக்கிறது மன்னார் இணையம்

வணக்கம் உறவுகளே....

எமது மன்னார் இணையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(25-10-2011)
 2 ஆண்டுகள் பூர்த்தி அடைந்து 3 வது ஆண்டில் காலடி வைப்பது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

மன்னார் மக்கள் இணையம் ஆரம்பித்த காலம் தொட்டு மக்களுக்கு பெரிதும் சேவையாற்றி வருகின்றமை எமக்கு
பெருமகிழ்ச்ச்சியளிக்கிறது.இவ் இணையம் மூலம் மக்கள் மன்னார் தகவல்களையும்,செய்திகளையும் உடனுக்குடன் அறியவும் எமது இணையம் பங்காற்றி வருகின்றது.

நாம் இந்த இணையத்தை ஆரம்பித்ததன் நோக்கம் உலகிலுள்ள தமிழ் பேசும் மக்கள் எமது மாவட்டத்தின் நிலைமைகளையும்,செய்திகளையும் அறிந்துகொள்வதட்கே இதன் மூலம் மக்களின் சமூக,பொருளாதார,அரசியல் மற்றும் வாழ்க்கைபடிநிலைகளையும் அறிந்து கொள்ள முடியும் இது மட்டுமன்றிமன்னார் மாவட்டத்துக்கென ஒருசெய்தி இணையமும் இல்லாத காரணத்தாலும் எமது மாவட்டம் பற்றிய தகவல்கள் மறைக்கப்படுவதாலும் அதை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துக்காவும் உதயமாகியது  எம் இணையம்.

   மன்னார் மாவட்ட சகல  நிகழ்வுகளும் உடனுக்குடன் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதட்கானா முயட்சியில் ஈடுபட்டுள்ளோம்.           மேலும் இணையத்தின் பணிகள் மன்னார் மக்களிற்காக மட்டுமின்றி அனைத்து தமிழ்பேசும் மக்களிற்காக இன்னும் சிறந்த விருத்தியுடன் உங்களை வந்தடையும் என்பதை  இவ்விடத்தில் அறியப்படுத்துகின்றோம்.

மன்னார் மக்கள் இணையச் செய்திகள் எந்த வகையிலும் பொய்யாகவோ,திரிவுபடுத்தியோ மக்களுக்கு தெரிவிக்கவிலை நாம் வெளியிடும் செய்திகள் அனைத்தும் உறுதிப்படுத்தியே வெளியிடுகின்றோம்.உண்மைக்கு மாறான அல்லது எம்மால் உறித்திப்படுத்த முடியாத செய்தியை நாம் வெளியிட விரும்பவில்லை, இதனால் தான் நாம் சில செய்திகளை தவிர்த்து வந்துள்ளோம் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

எமக்கு செய்திகளை அனுப்பும் வாசகர்களுக்கும் மற்றும் எமது வாசகர்களுக்கும் இணையத்தள நண்பர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
மேலும் மக்கள் எமக்கு ஆதரவினையும்,ஊக்கத்தினையும் வழங்கும்படி கேட்கின்றோம் மேலும் இனி வரும் காலங்களில் புதுப்பொலிவுடன் உங்களை வந்தடையும் என்பதனையும் இவ்விடத்தில் கூறி நிற்கின்றோம்.

நன்றி வணக்கம்

உண்மைகள் எப்போதும் உயிர் வாழும் 


மன்னார் இணையம்
Newmannar.com
Email newmannar@gmail.com
Skype- vmvithu
3 வது ஆண்டில் தடம் பதிக்கிறது மன்னார் இணையம் Reviewed by NEWMANNAR on October 25, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.